நிறுவனம்:அம்/ திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:10, 12 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=திகோ/தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் தம்பிலுவில்
முகவரி தம்பிலுவில், அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயமானது கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. இது 1945.01.15 ஆம் திகதி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. ஓலைகளால் வேயப்பட்ட குடிசை ஒன்றே கற்றல் செயற்பாடுகளின் களமாக அமைந்தது. அப்போது தலைமை ஆசிரியராக திரு. செளந்தராஜா கடமையாற்றினார். இவரைத் தொடர்ந்து 1965 ஆண்டு வரை திரு. பரநிருபசிங்கம் அதிபராக கடமையாற்றிய வேளை 05 ஆசிரியர்களும் 265 மாணவர்களும் காணப்பட்டனர். அத்தோடு ஒரு புதிய கட்டடமும் திறக்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டு திரு. கனகசபை அவர்கள் தலமைப் பொறுப்பிற்கு வந்தார். இவரின் காலத்திலே பாடசாலையை சூழவுள்ள முட்கம்பி வேலிக்குப் பதிலாக மதில் கட்டப்பட்டது. 1998 ஆம் ஆண்டு திருமதி. நவரெத்தினம் அவர்கள் அதிபராக பதவியேற்றார். இவரின் காலப்பகுதியில் தமிழ் மொழித் தினம், ஆங்கில மொழி தினம் போன்ற போட்டிகளில் பல வெற்றிகள் பெறப்பட்டன. அத்தோடு புதிதாக வாசிகசாலையும் அமைக்கப்பட்டது. புதிய உலகிற்கு வழியமைக்கும் மாணவர் திறன் கண்காட்சியும் நடைபெற்றது.

2001 ஆம் ஆண்டு தரம் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 16 மாணவர்கள் சித்திபெற்றனர். 2022 ஆம் ஆண்டு திரு. எ.டி. ஜேம்ஸ் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். அக்காலத்தில் தரம் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 8 மாணவர்கள் சித்தியடைந்தனர். அதில் ஒரு மாணவன் 169 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதன் நிலைபெற்றது சாதனையாகும். அத்துடன் பிரியமான பாடசாலையை சிறார்களுக்கு வழங்குவோம் என்ற வேலைத்திட்டம் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவர்களின் பெற்றார், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடந்தது.

கணணிக்கூடம் இத்தாலிய சிவில் புரடெக்‌ஷன்மிஷன் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது. 2008ம் ஆண்டு திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். அக்காலத்தில் நாணயங்களின் கண்காட்சி நடாத்தப்பட்டது. வாசிப்புத்திறனை கண்டறிவதற்கான ஓர் பயிற்சிப் பட்டறையும் நடாத்தப்பட்டது. அவர் ஓய்வு பெற்ற பின்னர் திரு சந்திரேஸ்வரன் என்பவர் அதிபரானார். இவரது காலத்தில் தரம் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவி மாலவன் சுபதா என்பவர் 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்தார். இங்கு தற்போது 12 ஆசிரியர்களும் 313 மாணவர்களும் உள்ளனர்.