ஆளுமை:இஸ்மாலெவ்வை, ஆதம்லெவ்வை

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:07, 18 ஏப்ரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இஸ்மாலெவ்வை
தந்தை ஆதம்லெவ்வை
தாய் பாத்திமா
பிறப்பு 1862/1872
இறப்பு 1912
ஊர் சம்மாந்துறை
வகை இலக்கியவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இஸ்மலெவ்வை,ஆதம்லெவ்பை, இவர் 1862 ஆம் 1872 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்துள் சம்மாந்துறை எனும் மண்பதியில் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது தந்தையின் பெயர் ஆதம்லெவ்பை. தாயின் பெயர் தெளிவில்லை இவர் ஒரு விவசாயத் தொழிலாளி. இவர் வட்டை விதானையாகவும் பணிபுரிந்து கொண்டு இயங்கினார்.

இவர் 1892 ஆம் ஆண்டில் இலக்கியத்துறை முயற்சியில் அடி எடுத்து வைத்துள்ளார். இவர் எவராவது ஒருவருடன் கதைக்கும் போதும் இவரது உரையாடல்களிடையே கவிதைநடைகள் இழையோடும். ஒரு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கவிதை நடையில் பதில்கள் சொல்லியதாக வரலாறு. இவர் தொடர்பான தகவல்கள் ஆர் . பி . எம் கனி எழுதிய இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்று இருக்கின்றன. இவர் 1912 ஆம் ஆண்டில் மரணம் எய்தினார்