ஆளுமை:விநாயகமூர்த்தி, பூபாலபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:57, 21 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஆளுமை:விநாயகமூர்த்தி, பூபாலப்பிள்ளை பக்கத்தை ஆளுமை:விநாயகமூர்த்தி, பூபாலபிள்ளை என்ற த...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூபாலபிள்ளை விநாயகமூர்த்தி
தந்தை பூபாலபிள்ளை
தாய் வள்ளிப்பிள்ளை
பிறப்பு 1922.02.24
இறப்பு 1992.03.05
ஊர் கிளிவெட்டி, திருக்கோணமலை
வகை சமூக சேவையாளர், கிராம சங்கத் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிராம சபை தலைவராக இருந்து, அரும்பணி ஆற்றிய ஒரு ஆளுமை இவர். இவர் மூதூரின் கிழக்குப்புறத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் 1922 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 24 ஆம் திகதி திரு. மு. பூபாலபிள்ளை மற்றும் வள்ளிப்பிள்ளை ஆகியோருக்கு பிள்ளையாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கிளிவெட்டி அரசினர் வித்தியாலயத்தில் கற்றதுடன், தொடர்ச்சியாக வந்தாருமுலை அரசினர் மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

இவர் கிளிவெட்டி கிராமத்தின் கிராம சங்கத் தலைவராக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றியதுடன், பல்வேறுபட்ட சமூகப் பணிகளை புரிந்துள்ளார். ஆசிரியர்களாக பணியாற்ற தகுதியுடையவர்களை இனங்கண்டு, தற்காலிக பாடசாலைகளை உருவாக்கி அவற்றை இயக்கி காட்டி அரசு பாடசாலைகளாக மாற்றுவதற்கு வழி செய்தார். இன்று லிங்கபுரம், பாரதிபுரம், கங்குவேலி, தங்கநகர் ஆகிய இடங்களில் காணப்படும் பாடசாலைகள் இவ்வாறே உருப்பெற்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். இவ்வாறு ஆசிரியர்கள் பலர் உருவாக வழி வகுத்த ஒரு நல் மனிதர் இவராவார்.

வெள்ளை ஆடையுடனும், மெடுக்கு நடையுடனும், சாதி, மத பேதம் இன்றி எல்லோரிடமும் பழகும் ஒரு மனிதர் இவர். வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத ஆலய நிர்வாக சபையுடன் இணைந்து செயலாற்றி சமயப் பணி புரிந்து வந்தார். மேலும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர் தெரிவில், போட்டி போட்டு, தோல்வி அடைந்திருந்தார்.

கிளி வெட்டி கிராமத்தை மேலும் உயர்த்த, ஆலயம், கடைத்தெருக்கள், கமநல சேவை நிலையம், நெல் சந்தைப்படுத்தும் நிலையம், இலங்கை வங்கி, கிராம நீதிமன்றம், வாராந்த சந்தை போன்றவற்றை அமைக்க பாடுபட்டார்.

இவர் மேன்காமத்தைச் சேர்ந்த தங்கமுத்து என்பவரை 1944 ஆம் ஆண்டு கரம் பிடித்து இல்லற வாழ்வில் வாழ்ந்து வந்தார்.

1992 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் ஐந்தாம் திகதி இறைவனடி சேர்ந்தார்.