ஆளுமை:சந்திரா, தங்கவேல்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:32, 30 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர் =சந்திரா )| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரா )
தந்தை தங்கவேல்
தாய் இராசம்மா
பிறப்பு 1959.01.05
இறப்பு -
ஊர் RV-4, தங்கநகர் - சேருவில -திருகோணமலை
வகை பன்முக ஆளுமையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கவேல் சந்திரா (1959.01.05) இவர் RV-4, தங்கநகர் - சேருவில - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த பன்முக ஆளுமையாளர் ஆவார். இவரது தந்தை தங்கவேல்;தாய் இராசம்மா. இவரது கணவரின் பெயர் கனகசூரியம். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை அரிவரி (முதாம் தரம்) வரைக்கும் தங்கநகர் சம்பகவல்லி தமிழ் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். இவர் Unicef, Save the Children, Aham முதலான நிறுவனங்கள் மற்றும் பல உள்ளூர் அமைப்புக்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது 64 வயதிலும் வனத்திற்குச் சென்று மரமேறி தேன் வேட்டை செய்யக்கூடியவராகக் காணப்படுகின்றார். இவர் தற்காலத்தில் காணப்படுகின்ற குறித்த பூர்வகுடிகளின் சமூகத்தின் முதுசமாகவும், கை தேர்ந்த தேன் வேட்டையராகவும், கை மருத்துவம் தெரிந்தவராகவும், யாத்திரை வழிகாட்டியாகவும், மருத்துவிச்சியாகவும், தனது வழிபாட்டினடியாக நோய்நீக்கலை மேற்கொள்ளக் கூடிய ஓர் வேடக்கப்புறாளையாகவும் என பன்முக ஆளுமை கொண்டவராகக் காணப்படுகின்றார்.