ஆளுமை:தெய்வேந்திரம், அழகுவேல்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:51, 22 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர் = தெய்வேந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தெய்வேந்திரம்
தந்தை அழகுவேல்
தாய் பாக்கியம்
பிறப்பு 1959.01.01
இறப்பு -
ஊர் வாழைத்தோட்டம்- கல்லடி - வெருகல் - திருகோணமலை
வகை வேடக்கப்புறாளை மற்றும் தேவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அழகுவேல் தெய்வேந்திரம் (1959.01.01) இவர் வாழைத்தோட்டம்- கல்லடி - வெருகல் - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த வேடக்கப்புறாளையும், தேவாதியும் ஆவார். இவரது தந்தை அழகுவேல்;தாய் பாக்கியம். இவரது மனைவியின் பெயர் மாணிக்கம். இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். இவர தனது பாடசாலைக் கல்வியினை அரிவரி (முதாம் தரம்) வரைக்கும் திருகோணமலை வெருகல் வாழைத்தோட்டம் தமிழ் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். தற்காலத்தில் காணப்படுகின்ற குறித்த பூர்வகுடிகளின் சமூகத்தின் முசுசமாகவும் பல இடங்களும் சென்று வழிபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற வேடக்கப்புறாளையாகவும் காணப்படுகின்றார். இவர் கடந்த நாற்பது வருடங்களாக வேடர்களின் தெய்வங்களுள் ஒன்றான மலை நீலி அம்மன் வழிபாட்டு மையத்தின் மதகுருவாகவும் காணப்படுகின்றார். தற்காலத்தில் வேட மொழியில் சடங்கார்ந்த நடவடிக்கைகளைச் செய்யக்கூடியவராகவும், வேட வழிபாட்டு மன்றாட்டுப் பாடல்களை மிகத்துல்லியமாகப் பாடக்கூடியவராகவும் காணப்படுகின்றார். இவர் வேடர் கலை மற்றும் தமிழர் கிராமிய கலை ஆகிய வழிபாட்டு முறைகளையும் நன்குணர்ந்து செயற்படக்கூடியவராகவும் காணப்படுகின்றார். முழு நேர மதகுருவாகக் காணப்படுகின்ற அதே வேளை மீன்பிடித் தொழிலையும் செய்யக்கூடியவராகவும் இவர் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.