நிறுவனம்: குமாரத்தன் வேடர் வழிபாட்டிடம் - 2

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:04, 22 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரத்தன் வேடர் வழிபாட்டிடம் - 2
வகை சடங்கு மையம்
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் தளவாய்
முகவரி தளவாய்,ஏறாவூர், மட்டக்களப்பு
தொலைபேசி 0769755317
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


இலங்கைத் தீவில் கரையோர வேடர்களின் செறிவான குடிப்பரம்பலானது மட்டக்களப்பு மாவட்டத்திலே தான் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் உள்ள கரையோர வேடர் தொல்கிராமங்களுள் ஒன்றான தளவாய் எனும் கிராமத்தில் இருக்கும் இரண்டாவது குமாரர் சடங்கு மையம் இதுவாகும். ஆரம்ப காலங்களில் மட்டக்களப்பு எங்கும் வேடரும், அவர் தம் வழிபாட்டு முறைகளும் காணப்பட்டுள்ளமைக்கு இவ்வழிபாட்டிடம் மேலதிக தற்காலச் சான்றாக விளங்குகின்றது. கால மாற்றங்களுக்கு ஏற்ப உட்வாங்கிக் கொண்ட பல நவீனப்படுத்தல் மரபுகளை இவ்வழிபாட்டிடமானது தற்காலத்தில் கொண்டு விளங்குகின்றது. அவ்வகையில் பந்தல் அமைப்பு முறைகள், சடங்கு மையச்சூழல் மற்றும் அதன் புறச்சூழல் முதலான சகல விடயங்களும் நவீனப் போக்குகளை உள்வாங்கிக் கொண்டுள்ளன.

அவ்வகையில் இதன் ஆதிகால கப்புறாளைமார்களான பனுவள சீயா, செல்லாப்பத்து சீயா, நல்லமாப்பான சீயா, பட்டியடி சீயா, திருக்காகனி சீயா, வெம்புத்தவறனை சீயா, புளியட்டி சீயா ஆகியோருக்குப் பின்னரான, தற்போதைய வாழும் கப்புறாளையாக சின்னப்பொடியன் என்பவர் காணப்படுகின்றார். இவர் தனது தனிப்பட்ட முயற்சியினால் இவ்வழிபாட்டு மையத்தினை தற்பொழுது செய்து வருகின்றார். வருடத்திற்கொரு முறை இங்கு பெரியளவிலான சடங்காற்றுகை நிகழ்வு இடம் பெறும். அது தவிர இங்கு தினந்தோறும் குணமாக்கல் சார்ந்த வழிபாடு முறைகள் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.