ஆளுமை:குகனேஸ்வரலிங்கம், அண்ணலிங்கம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:26, 11 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அண்ணலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அண்ணலிங்கம் குகனேஸ்வரலிங்கம்
தந்தை அண்ணலிங்கம்
தாய் செல்லம்மா
பிறப்பு 1960.01.02
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை புத்தக சேகரிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் திருக்கோணமலையைச் சேர்ந்த புத்தக சேகரிப்பு மற்றும் பத்திரிகை ஆவணங்களை ஆவணப்படுத்துவதை தனது பொழுதுபோக்காக நீண்ட காலமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு ஆளுமை மிக்க நபராவார்.

இவர் 02.01.1960 யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறையில் அல்வாய் என்ற இடத்தில் அண்ணலிங்கம், செல்லம்மா தம்பதிக்கு 6 சகோதரர்களுடன் பிறந்தார். இவர் பின்னர் 1970களில் திருக்கோணமலைக்கு தொழில் நிமித்தமும், விவசாய காரணங்களுக்காகவும் அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தார். இவரது சிறுவயது முதல் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் புத்தக சேகரிப்பு மற்றும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அதிக அளவில் கொண்டிருந்தார். இவர் ஹார்ட்லி கல்லூரியில் தனது கல்வியை சாதாரண தரம் வரை தொடர்ந்தார். கலைப்பிரிவில் கல்வி கற்றார். கிருபானந்த வாரியார் சன சமூகத்தில் உறுப்பினராக இருந்த இவரது மாமா ஒருவரே, இந்த ஆர்வம் ஏற்பட சிறு வயது முதல் காரணமாக இருந்துள்ளார்.

1990 களில் திருகோணமலையில் நிரந்தரமாக குடியேறினார். பின்னர் யுத்த சூழ்நிலைகள் காரணமாக கூலி வேலைகளுக்கும், தச்சு வேலைகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். எவ்வித கஷ்டங்கள் வந்த போதும் தனது சேகரிப்பு பழக்கத்தை இவர் கைவிடவில்லை. இவர் திருக்கோணமலையில் சித்தி அமரசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் புத்தக வாசிப்பு ஆர்வம் மிக்க நபராகவும், சேகரிக்கும் பழக்கத்தையும் 2000 ஆண்டுகளிலும் தொடர்ந்து கொண்டிருந்தார். இன்று இவரிடம் சுமார் ஆயிரம் புத்தகங்கள் தனது சேகரிப்பில் வீட்டில் சிறு அறை ஒன்றில் ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். மற்றும் பல பத்திரிகை மற்றும் ஆவணங்களையும் ஆவணப்படுத்தி சேகரித்து வைத்துள்ளார்.