ஆளுமை:தனிநாயகம், கந்தையா
{ஆளுமை| பெயர்=கந்தையா தனிநாயகம்| தந்தை=கந்தையா| தாய்=கங்காரத்தினம்| பிறப்பு=1952.06.24| இறப்பு=-| ஊர்=சாம்பல்தீவு, திருக்கோணமலை| வகை=உள்ளூர் ஆளுமை| புனைபெயர்=-| }}
சாம்பல்தீவு கிராமத்தைச் சேர்ந்த கந்தையா தனிநாயகம் அவர்கள் 1952 ஆம் ஆண்டு ஆனி மாதம் 24 ஆம் திகதி, கந்தையா மற்றும் கங்காரத்தினம் ஆகியோருக்கு மகனாக சாம்பல்தீவில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை சாம்பல்தீவு மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் கற்றார். அதன்பின் திருக்கோணமலை இந்து கல்லூரியில் கல்வி கற்றதுடன், யாழ்ப்பாணத்திலும் கல்வி கற்றார். பின்னர் விவசாய பாடசாலைக்கு உள்ளீர்க்கப்பட்டு, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியில் இணைந்து கொண்டார். மட்டக்களப்பு, கிளிவெட்டி, தோப்பூர், பளை, வடமராட்சி, வவுனியா என பல இடங்களில் பணி ஆற்றியதுடன், தன்னால் இயன்றவரை தென்னை அபிவிருத்தியில் மக்களுடன் சேவையாற்றினார்.
இவர் சாம்பல்தீவு கிராமத்தின் மூத்த குடிமக்களுள் ஒருவராக இருப்பதுடன், சாம்பல்தீவின் வரலாற்று ஆய்வுகளில் முக்கிய பங்காற்றிய தம்பிராசா அவர்களுடன் செயற்பாட்டு ரீதியில் பயணித்த ஒருவராவார்.
இவர் சாம்பல்தீவு கிராமத்தின் நீர் வளங்கள், நிலங்கள், ஆலயங்கள் போன்றவற்றை பற்றிய சிறப்பான ஒரு அறிவு கொண்ட ஒருவர். இவர் சாம்பல்தீவு கிராமத்தில் வசிக்கும் பலரின் பூர்வீகம், குடும்ப ஒழுங்கு போன்றவை தொடர்பில் அறிந்தவர். இவர் தம்பிராசா அவர்கள் கிராமசபை தலைவராக இருந்த காலத்தில் அவருடன் இணைந்து சிரமதானங்கள், கிராம அபிவிருத்திச் செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். கிராம மக்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் பத்திரிகைகளை மக்களிடையே பகிரும் செயற்ப்பாடுகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.