நிறுவனம்:கருணாகரப்பிள்ளையார் கோவில்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:35, 27 செப்டம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= கருணாகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கருணாகரப்பிள்ளையார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் கனகபுரம்
முகவரி கனகபுரம்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


கிளிநொச்சி மாநகரில் இருந்து மேற்குப் பார்த்து விரிகிறது அக்கராயன் ஊடான முழங்காவில் சாலை. நகரத்தில் இருந்து 5 ஆவது கிலோ மீற்றரில் தெற்காகத் திரும்பும் வளை பாதை மூலையில் வீற்றிருக்கின்றார் கருணாகரப்பிள்ளையார். முன்னைய காலத்தில் வேட்டையாடிகளும் காட்டை ஊடறுத்துப் பயணங்கள் செய்வோரும் ஆபத்துக்கள் எதுவும் நேரக் கூடாது என்பதற்காகக் கற்களையும் புற்றுக்களையும் தெய்வ உருவாக நினைத்து குழை கொப்புகளை முறித்து வைத்து வழிபட்டுச் செல்வது வழக்கம். அந்த வகையில் அற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என்ற ஞாபகம் விறகு வெட்டிகளும் வழிப்போக்கர்களும வணங்கி விட்டுப் போகும் குறியீட்டுப் புற்றடிப் பிள்ளையாராகவே கருணாகரப் பிள்ளையார் தோற்றம் கண்டார். 1958 ஆம் ஆண்டு கனகபுரம குடியேற்றம் ஆரம்பிக்கப்ட்ட காலத்தில் CO மகாதேவா அவர்கள் காணகளுக்குப் பொறுப்பாக இருந்த அவர் அக்காலத்தில் புற்றடிய-ல் உருவாகிய பிள்ளையாருக்கு ஆலயம் அமைப்பதற்காக 3 ஏக்கர் காணியை ஒதுக்கி வழங்கியுள்ளார். ஆரம்ப காலத்தில் கனகபுரம் வாழ் மக்கள் முதன்முதலாக வழிபபாடு செய்து பராமரித்து வந்த ஆலயம் இதுவாகும். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு சிவகுருநாதன் பாலச்சந்திரன், சுப்பிரமணியம் இந்திரமேலன் ஆகியோர் தொடர் முயற்சியை மேற்கொண்டு புற்று உருவமாக இருந்த பிள்ளையாருக்கு சிற்றாலயம் ஒன்றை அமைத்தனர். பின் வந்த நாட்களில் இரத்தினசபாபதி குருக்கள் (ஈசன் ஐயாவின் தந்தை) அவர்களின் தலைமையில் எண்ணை சாத்தி கும்பாபிஷேகம் செய்ததுடன் அன்று கருணாகரப்பிள்ளையார் என்று நாமம் சூட்டப்பட்டது. அக்காலப் பகுதியில் பிரதேச செயலாளராக இருந்த திரு. பொன் நித்தியானந்தம் , கிராம உத்தியோகத்தர் மற்றும் கலாசார உத்தியோகத்தர் முன்னிலையில் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. அன்றைய தலைவராக திரு.ஆறுமும் சுப்பிரமணியம் உட்பட செயலாளர், பொருளாளர், மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். அன்று முதல் அவ்வாலயத்தில் நித்திய பூசை பிள்ளையாருக்குரிய விசேட பூசைகள் செய்து பூசகருக்கு மாதாந்த வேதனமும் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் நிர்வாகத் தெரிவு மூலமே ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் பொன்னையா இராமலிங்கம் , பொன்னுத்துரை சண்முகசுந்தரம், செல்வநாயகம் நவலோகநாதன் போன்றோர் தலைவர்களாகவும் அவர்களுடன் ஆலயத்தின் சுற்று வட்டத்தைச் சேர்ந்தவர்களும் நிர்வாக உறுப்பினர்களாகவும் இணைந்து செயற்பட்டு ஆலயத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றினார்கள். 2008 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையால் பிரதேசத்தை விட்டு ஒட்டு மொத்த மக்களும் குடிபெயர்ந்தனர் . சுமார் ஒன்றரை வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மீள் குடியேறிய ஊர் வாசிகள் ஒன்று கூடி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. குறித்த நிர்வாக சபைக்கூடாக கரைச்சிப் பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவினரால் ஆலய நிர்மாண வேலைகளுக்காக ரூபா ஒரு இலட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியுடனும் அயலவர்களின் நிதியுதவியுடனும் ஆரம்ப காலத்தில் CO மகாதேவா அவர்களினால் வழங்கப்பட்ட காணியில் சிறியதொரு ஆலயத் திருப்பணி வேலைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டிய கிரியைகளை மேற்கொள்வதற்கு நிதி உதவிகள் போதாமையால் ஆலயத்தின் மேம்பாட்டு செயற்திட்டங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் தடையும் தாமதமும் தொடர்ந்த வண்ணமுள்ளன.