நிறுவனம்:குஞ்சன் குளம் நன்னீர் மீன்பிடி அமைப்பு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:46, 21 செப்டம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=குஞ்சன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குஞ்சன்குளம் நன்னீர் மீன்பிடி அமைப்பு
வகை அமைப்பு
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் குஞ்சன்குளம்
முகவரி குஞ்சன்குளம், மாங்கேணி, மட்டக்களப்பு
தொலைபேசி 0776922036
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


குஞ்சன்குளம் நன்னீர் மீன்பிடி அமைப்பானது கிழக்கு மாகாணத்தில் கரையோர வேடர்கள் செறிந்து வாழும் குஞ்சன்குளம், கிரிமிச்சை, மதுரங்குளம் ஆகிய கிராமங்களினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் அமைப்பாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் தற்போதைய தலைவராக கே. நகுலன் அவர்கள் காணப்படுகின்றார். செயலாளராக சி.ஜெயக்குமார் அவர்கள் காணப்படுகின்றார். பொருளாளராக கு. ஜெயசீலன் என்பவர் காணப்படுகின்றார். அவ்வகையில் இவ்வமைப்பானது குளத்தில் மீன் குஞ்சுகளை விடுதல், மீனவர்களுக்கு தோணி மற்றும் வலை முதலானவைகளை மாணிய அடிப்படையில் கொடுத்தல், மீன்களுக்கான சந்தைப் பெறுமதியைத் தீர்மானித்தல், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு முறையான தண்டனைகளை வழங்குதல் மற்றும் அவர்களைத் தடுத்தல் முதலான வேலைகளைச் செய்கின்றது. அத்துடன் நீர்வளச்சூழலையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது.