நிறுவனம்:சாம்பல்தீவு வீரபத்திரர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:23, 18 செப்டம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=சாம்பல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாம்பல்தீவு வீரபத்திரர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சாம்பல்தீவு
முகவரி சாம்பல்தீவு வீரபத்திரர் ஆலயம், சாம்பல்தீவு, திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

சாம்பல்தீவு வீரபத்திரர் ஆலயம் சாம்பல்தீவின் மக்கள் குடியேற்ற காலத்தில் இருந்தே தொண்டு தொட்டு வழிபட்டு வரும் ஒரு கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். இந்த ஆலயம் சாம்பல்தீவின் பிரதான வீதியில் சாம்பல்தீவுக்குள் நுழையும் பொழுது முதலாவதாக தென்படும் ஆலயமாக உள்ளது. இந்த ஆலயம் வெவ்வேறு காலப்பகுதியில் கிராமத்தின் வெவ்வேறு குடும்பங்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் விசேட தினங்களில் பூஜைகள் இடம் பெறுவதுடன், கிராமிய வழிபாட்டு முறையே பேணப்பட்டு வருகின்றது. மேலும் சல்லி அம்பாள் ஆலய கும்பம், மாங்கணாய் மாரியம்மன் கும்பம் போன்ற தினங்களில் வெளியிடங்களில் இருந்து வரும் கும்பம், கரகம், காவடி என்பன இவ்வாலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டு செல்வது வழக்கம்.

இந்த ஆலயத்தில் பிரதான ஆலயமாக மடம் போன்ற கட்டமைப்பு ஒன்று காணப்படுவதுடன், ஆலயத்தில் உள்ள வேப்பமரம் மற்றும் தென்னை மரம் என்பவற்றின் கீழ் சூலங்கள் பதிக்கப்பட்டு வழிபாடுகள் இடம் பெற்று வருகின்றன. இந்த ஆலயத்திற்கு சொந்தமான காணியானது ஒழுங்கான முறையில் பேணப்பட்டு வருகின்றது. இராமநாதன், அகத்தியர் அப்பா போன்றவர்கள் இந்த ஆலயத்தை தங்களுடைய காலப்பகுதிகளில் ஒழுங்காகப் பேணி ஆதரித்துள்ளனர்.

இந்த ஆலயத்தை பற்றி கிராம மக்கள் குறிப்பிடும் பொழுது, "தொடர்பு இறுக்கம் என்றால், வீரபத்திரர் அழைக்கும் போது வருவார்" எனக் குறிப்பிடுகின்றனர்.

மேலும், இந்த ஆலயம் உருவாக்கப்பட்ட காலப்பகுதி சரியான முறையில் தெரியாவிடினும், மக்களின் கருத்துப்படி 1900 க்கு முன்னர் இருந்தே இந்த ஆலய வழிபாடு காணப்பட்டு வருவதாக குறிப்பிடுகின்றனர்.