நிறுவனம்:அன்னை வேளாங்கன் மாதா ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:47, 31 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= அன்னை வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்னை வேளாங்கன் மாதா ஆலயம்
வகை கிறிஸ்தவ ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் கனகபுரம்
முகவரி கனகபுரம்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இவ்வாலயம் கனகபுரம் மகா வித்தியாலயத்திற்குப் பின் வீதி அருகே அமைந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு இளவாலையைச் சேர்ந்த திரு.தேவசகாயம் அமுதரத்தினம் அவர்களால் தனது காணியின் முன் பகுதியில்இரண்டு பரப்புக் காணி ஒதுக்கப்பட்டு சிறிய கொட்டில் அமைத்து உருவாக்கப்பட்டது. அப்போது இவ்வாலய ஆராதனைகளை பங்குத்தந்தை மைக்கல் செய்து வந்தார். இதனை அலோசியஸ், மேரி யோசப் (நடா)ஆகியோர் பராமரித்து வந்தனர்.1990 ஆம் ஆண்டு மேரி யோசப்(நடா) அவர்கள் உட்பட சிலரின் முயற்சியால் சிறியதொரு ஆலயம் அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் பெருநாள் சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருவதுடன் கிறிஸ்தவர்கள் அல்லாத இப்பகுதி சைவப்பெரு மக்களாலும் மாதா வணங்கப்பட்டு விழாக் காலங்களில் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஸ்ரீ காந்தா சனசமூக நிலையமும் ஒரு தொகை பணத்தை வருடா வருடம் வழங்கி விழாவினைச் சிறப்பித்து வருகின்றது. இவ்வாலயத்திற்கு மேலும் ஒரு பரப்புக் காணியை இரத்தினம் அவர்களின் மகள் வழங்கியுள்ளார்.