ஆளுமை:ஜெயராணி, நடராசா
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:32, 30 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெயராணி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | ஜெயராணி |
தந்தை | நடராசா |
தாய் | தங்கநேசம் |
பிறப்பு | 1976.06.25 |
இறப்பு | - |
ஊர் | சேனைக்கண்டம் , களுவன்கேணி, மட்டக்களப்பு |
வகை | பெண் வேட மதகுரு |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராசா ஜெயராணி (1976.06.25) சேனைக்கண்டம், களுவன்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் வேட மதகுரு ஆவார். இவரது தந்தை நடராசா;தாய் தங்கநேசம். இவரது கணவன் வேலுப்பிள்ளை. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் ஆறு வரை களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். தனது தந்தையின் வழியில் வந்த இரண்டாவது தலைமுறையாக இவர் குறித்த சடங்கு மையத்தினை நடாத்தி வருகின்றார. தனது அப்பாவிடம் இருந்து இவர் வேடர் மரபு மற்றும் சடங்கு சார்ந்த சகல விடயங்களையினையும் கற்றுள்ளார். தனது சடங்கு மையத்தில் வழிபடப்படும் சகல விதமான கடவுளரின் மன்றாட்டுப் பாடல்களினையும் வேட மொழியில் திறமாக உச்சரிக்கக் கூடியவர் வேடர் வழிப்பாட்டு மரபானது ஆரம்பத்தில் பெண்களை மையப்படுத்தியே இருந்துள்ளது என்பதற்கு இவர் இக்கால சான்றாகக் காணப்படுகிறார்.