நிறுவனம்:கிளி/ செல்வாநகர் அ.த.க. பாடசாலை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:33, 24 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= கிளி/செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/செல்வாநகர் அ.த.க.பாடசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் செல்வாநகர்
முகவரி செல்வாநகர்
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


கிளி/செல்வாநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசத்திலுள்ள செல்வாநகர் கிராமத்தில் அமைந்துள்ளது. இப்பாடசாலை 1995.02.01 அன்று ஆரம்பிக்கப்பட்டது. செல்வாநகர் அ.த.க.பாடசாலை ஆரம்பிக்க ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்திற்குப் பாடசாலை ஒன்று தேவை என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்பட எத்தனித்த போதும் சரியான அமைவிடம், பௌதீக வளம், ஆளணி இல்லாமையால் முயற்சி கைகூடவில்லை. 1995.02.01 காலப்பகுதியில் செல்வாநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அமைப்பதற்கு செல்வாநகர் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் செல்வாநகர் தமிழ்ச்சங்கம் என்பன தமது ஒத்துழைப்பினை வழங்கியதன் பெயரில் முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளர் அமரர்.கனகசபாரெத்தினம் அவர்களின் விடாமுயற்சியின் பிரதிபலனாய் கல்வி அமைச்சினால் இப்பாடசாலை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றது.இக்கிராமத்தைச் சேர்ந்த மக்களில் 98 சத வீதத்தினர் 1983,1985 ஆகிய ஆண்டுகளில் நாட்டின் சீரற்ற நிலையால் மலையகப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து காடு அழித்து குடியேறியவர்கள் ஆவர். அவர்களின் பிள்ளைகள் அயற் கிராமத்தில் அமைந்துள்ள புதுமுறிப்பு பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையில் தமது ஆரம்பக் கல்வியை இழந்து வீடுகளில் முடங்கினர். பெற்றோர் நாளாந்தக் கூலி வேலைக்குச் சென்றமையாலும் கல்வியில் நாட்டத்தைக் காட்ட முடியவில்லை. ஆரம்பக் கல்வியை இழந்து நின்ற மாணவர்களின் விபரத்தை முன்னாள் கோட்க் கல்விப்பணிப்பாளர் அமரர்.திரு.கனகசபாரெத்தினம் அவர்கள் சேகரித்துக் கல்வித் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு நிலையைக் கூறி வந்த வகையில் கல்வி அமைச்சால் பாடசாலை ஆரம்பிக்கப்பட அனுமதி கிடைக்கப் பெற்றது. அத்துடன் இக்கிராமத்திற்கு முன்பள்ளி ஒன்றும் தேவையென முன்பள்ளிக்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார். செல்வாநகர் பாடசாலைக்காக ஏறக்குறைய 5 ஏக்கர் காணியை திரு. பற்றிக் அவர்கள் அன்பளிப்புச் செய்தார். தமிழ்ச் சங்க இளைஞர்கள் ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு முன்னுள்ள காணியை முன்பள்ளி அமைக்க அன்பளிப்புச் செய்திருந்தனர். செல்வாநகர் ஸ்ரீ முத்து மாரி அம்மன் பஞ்ச கர்த்தா தலைவராக அமரர்.திரு.கனகசபாரெத்தினம் அவர்கள் விளங்கியமையால் அவரின் முயற்சியால் அறநெறிப் பாடசாலை அனுமதியும் கிடைக்கப் பெற்றது. இப்பாடசாலை அமைக்கப்பட்ட 1995.02.01 ஆம் திகதியன்று வலயக் கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றிய திரு.சி.கமலநாதன் அவர்கள் பாடசாலைப் பெயர்ப் பலகையினைத் திரை நீக்கம் செய்திருந்தார். அப்போது கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய திரு. பொன்சபாபதி அவர்கள் அலுவலகம், கட்டடம் ஆகியவற்றின் நாடாவை வெட்டி பாடசாலையை ஆரம்பித்து வைத்தார்.அன்றைய தினம் கிளி /புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலய அதிபர் திரு.ம.தெய்வேந்திரம் அவர்கள் மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், செஞ்சிலுவைச் சங்க அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர். இப்பாடசாலையின் முதல் அதிபராக கல்வித்திணைக்கள நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்ட செல்வி பிரபாலினி சபாரெத்தினம் அவர்கள் கடமையேற்றார். தரம் 1தொடக்கம்5 வரையே மாணவர்களுக்கான அனுமதி கிடைக்கப் பெற்றிருந்தது. முதல் ஆசிரியராக திரு.சேகரன் அவர்கள் நியமிக்கப்பட்டார். முதல் மாணவன் செல்வன் ஜெயப்பிரகாஷ்-ஜெயதேவா ஆவார். பாடசாலையின் முதல் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.தர்மலிங்கம் ஆவார். முன்பள்ளி ஆசிரியர் செல்வி ரஞ்சிதா, சுப்பையா அவர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர் திருமதி கமலேஸ்வரி சந்தனராஜ் முதல் ஆசிரியர் ஆவார். 1995 காலப்பகுதியில் யாழ்ப்பாண மக்கள் இடம்பெயர்ந்து வந்தமையால் 200 ற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு பாடசாலை இயங்கி வந்தது. அக்காலப்பகுதியில் மாணவர்கள் ஊக்கத்துடன் கற்றனர். இணைப்பாட வதானச் செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கினர். 1996 ஆவணி மாத காலப்பகுதியில் நாட்டின் சீரற்ற நிலைமையால் மக்கள் கிளிநொச்சி நகரப்பகுதியை விட்டு இடம்பெயர்ந்தனர். மக்கள் பலரும் அக்கராயன் பகுதியில் குடியேறியதால் செல்வாநகர் அ.த.க.பாடசாலை அம்பலப்பெருமாள் சந்தி அக்கராயனில் தற்காலிகமாக இயங்கப் பெற்றது. அmப்போது 500க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆரம்பக்கல்வியை இப்பாடசாலையில் பயின்றனர். 15 நிரந்தர ஆசிரியர்கள், 4 தொண்டராசிரியர்கள், ஒரு பகுதி நேர ஆங்கில ஆசிரியர் என பாடசாலைக் கல்வி, மற்றும் இணைப்பாட செயற்பாடுகளைான விளையாட்டுப் போட்டிகளைில் பல சாதனைகளை நிலைநாட்டியது. தற்காலிகமாக இயங்குவதற்கு போரூட், யூனிசெப் ஆகிய நிறுவனங்கள் தற்காலிக கொட்டகைகள், குழாய்க்கிணறு,மலசலகூடம், கற்றல் உபகரணங்கள் என்பனவற்றை பாடசாலைக்கு வழங்கி உதவினர். கூட்டுறவுச் சங்கத்தினரால் சத்துணவு இலைக்கஞ்சித் திட்டமும் மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப் பட்டது. அக்கஞ்கியை நம்பியே மாணவர்கள் gசியுடன் பாடசாலைக்கு வந்து சாதனைகள் பல படைத்த காலமது. திருமதி.கமலேஸ்வரி சந்தனராஜ் அவர்கள் இப்பாடசாலையுடன் இணைந்து செல்வாநகர் முன்பள்ளி இடம்பெயர்ந்த போது அம்பலப்பெருமாள் அக்கராயன் சந்தியில் நடாத்தி வந்தார். 2000 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் மீளவும் இப்பாடசாலை செல்வாநகர் கிராமத்திலேயே தரம் 1-5 வகுப்புக்களுடன் அமையப்பெற்றது. பாடசாலை வந்தமையால் இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் இக்கிராமத்தில் வந்து குடியேறினர். பாடசாலை கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி கர்ப்பிணித்தாய்மாருக்கான மருத்துவ ஒழுங்குகள், சத்துணவு என்பனவும் குழந்தைகளுக்கான மருத்துவ ஒழுங்குகளும் பாடசாலையில் ஒரு பகுதியில் அமைத்துக் கொடுத்தமையால் பல கிராம மக்கள் வந்து பயன் அடைந்தனர். பாடசாலை இக்கிராமத்திற்கு மீள வந்த போதும் தற்காலிக கொட்டில்களிலேயே பாடசாலை நடைபெற்றது. ஆனாலும் கல்வியிலும் , இணைப்பாடவிதானத் துறைகளிலும் பல வெற்றிகளை சாதித்து வந்தது. 2002.01.17 ஆம் திகதி திருமதி.காஞ்சனா சிவகரன் அவர்கள் இரண்டாவது அதிபராகப் பாடசாலையைப் பொறுப்பேற்றார்.