ஆளுமை:தம்பிப்பிள்ளை, கந்தையர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:04, 24 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= தம்பிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிப்பிள்ளை
தந்தை கந்தையர்
தாய் -
பிறப்பு 1928.12.10
ஊர் கிராஞ்சி
வகை பேராசிரியர்,ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோ.க.தம்பிப்பிள்ளை காரைநகரில் பிறந்தார் (1928.12.10). இவர் தனது கல்வியை தின்னவேலி முத்துத்தம்பி பாடசாலையில் கற்றார். இவர் ஆசிரியராக 16.01.1950 ஆம் ஆண்டில் சிங்கள மாணவர்களுக்கு குருணாகல் பாடசாலையில் தமிழ்மொழியைக் கற்பித்தார்.தொடர்ந்தும் சிங்கள மொழியை குறுகிய காலத்தில் கற்று SSC பரீட்சையில் சித்தி பெற்றார். இலங்கை வானொலியின் பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணி புரிந்தார். இலங்கைப் பாராளுமன்றத்தில் 22 வருடமாக மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். காந்தி சேவா சங்கத்தில் மாணவனாக இருந்த போதே இணைந்தார்.1956 ஆம் ஆண்டில் காந்தி நிலையமானது கிளிநொச்சியில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனமாகும். இந்நிறுவனத்தை வேலாயுதபிள்ளை என்பவருடன் இணைந்து ஆரம்பித்தவர். காந்தி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் செயலாளராக இருந்ததுடன் தற்போதைய தலைவராகவும் இருக்கின்றார். சிறுவயது முதற்கொண்டு காந்திக் கொள்கையில் ஆர்வம் கொண்டு அதன் வழி செயற்பட்டு சேவை செய்து வருகின்றார். சிங்கள, தமிழ் இனங்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக ஆரியரத்ன, லங்காதீப ஆசிரியர் விக்ரர் ஐவன் போன்றோரை சந்தித்துள்ளார்.