நிறுவனம்: தி/ இ. கி. ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:34, 2 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=திருகோண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருகோணமலை இ. கி. ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகோணமலை நகரம்

முகவரி=தி/இ. கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருகோணமலை

முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி 0262222426
மின்னஞ்சல் TCOHINDU@SLTNET.LK
வலைத்தளம் https://trincohindu.com


திருகோணமலையில் பெருமைமிக்க நீண்ட கால வரலாற்றைக் கொண்ட ஒரு பாடசாலை இ. கி. ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆகும். இந்தப் பாடசாலை 1897 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்று இந்த பாடசாலையை உருவாக்கியவர்கள் ஒரு நிர்வாக சபையை நிறுவி ஊர் மக்களின் நிதி உதவியுடன் பாடசாலை நடத்தி வந்ததனர். இந்த காலப் பகுதியில் பாடசாலை திருகோணமலை இந்து ஆண்கள் தமிழ் பாடசாலை மற்றும் திருக்கோணமலை இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை என இரு பாடசாலைகள் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது.

01.06.1925 ஆம் ஆண்டு பாடசாலையை சுவாமி விபுலானந்தர் அடிகள் இராமகிருஷ்ண மிஷனுக்காக பொறுப்பேற்று, பாடசாலையின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். சுவாமி விபுலானந்தர் அவர்கள் இந்து ஆண்கள் தமிழ் பாடசாலைக்கு ஸ்ரீ கோனேஸ்வரா வித்தியாலயம் என பெயர் சூட்டினார். 1928 ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் அவர்கள் பாடசாலையின் அதிபர் பொறுப்பை பொறுப்பேற்று பாடசாலைக்கு வழி காட்டினார். அத்துடன் 1930 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இ கி மி இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை, இ கி மி இந்து கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டது. இந்தப் பாடசாலைகள் 1962 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பாடசாலைகளை பொறுப்பேற்ற போது இரண்டு தனி தனி பாடசாலைகளாக அரசிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் இ கி மி இந்து ஆண்கள் தமிழ் பாடசாலை, 1965 ஆம் ஆண்டு ஸ்ரீ கோணேஸ்வரா வித்யாலயமாக பெயர் மாற்றப்பட்டது. பின்னர் 1.2.1993 ஆம் ஆண்டு இந்த இரண்டு பாடசாலையும் ஒருங்கிணைக்கப்பட்டு தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டதுடன், பல வசதிகளை கொண்ட பாடசாலையாகவும் விருத்தி பெற்றது.

இந்தப் பாடசாலை தனது தூர நோக்கில் நவீன உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும், சமய சமூக விழுமியங்களை மதித்து பொறுப்புணர்வுள்ள பிரஜைகளாகவும் மாணவர்களை பலப்படுத்துவதற்கு உரிய பணிகளை கல்லூரி முன் நின்று செயல்படுத்துகின்றது. கல்லூரியின் மகுடவாசகம், கல்வி, ஒழுக்கம், தூய்மை என்பனவாகும்.

இந்த பாடசாலையில் காணப்பட்ட இட நெருக்கடியை கருத்தில் கொண்டு 168 பேர்ச் அளவிலான காணியை 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாடசாலை பொறுப்பெடுத்து, தனியான ஆரம்ப பிரிவை 07.04.2008 அன்று அத்திவாரமிட்டு ஆரம்பித்தது. இன்று ஆரம்ப பாடசாலை தனியாக மின்சார நிலைய வீதியில் இயங்கி வருகின்றது. தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பல சாதனைகளை புரிந்துள்ளதுடன், இந்த பாடசாலை மாணவர்கள் பல்வேறுபட்ட விருத்திகளையும் வெளிக்காட்டும் நிலையை தொடர்ச்சியாக பேணி வருகின்றனர்.

இன்று இந்தப் பாடசாலை 2500க்கு மேற்பட்ட மாணவர்களையும், நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும், 25க்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்களையும் கொண்டு பாரிய ஸ்தாபனமாக இயங்கி வருகின்றது. மேலும் விளையாட்டு, சாரணீயம், கலை, கலாச்சாரம், புனித யோவான் படையணி, இன்னியம் என பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், வெளிநாடுகளிலும் பழைய மாணவர் சங்கத்தைக் கொண்டு இயங்கும் ஒரு பாரிய பாடசாலை விருத்தி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.