நிறுவனம்:கிளி/ செல்லையாத்தீவு அம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:29, 21 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= செல்லைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லையாத்தீவு அம்மன் ஆலயம்
வகை ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் பூநகரி
முகவரி செல்லையாத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


பூநகரி பிரதேசத்தில் கொல்லகுறிச்சி கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆலயமாகும். கண்ணகி மதுரையை எரித்து விட்டு பல இடங்களுக்குச் சென்றதாக ஐதீகங்கள் கூறுகின்றன. இலங்கையில தரிசித்துச் சென்ற பல தலங்களில் இதுவும் ஒன்றாகக் கூறப்படுகின்றது. பூநகரியில் மறவர்குறிச்சி எனும் கிராமத்தில் மறவர் பரம்பரை மக்கள் கமம் செய்வதும்,கால்நடைகளட வளர்ப்பதும் தமது தொழிலாகச் செய்து வந்தனர். இந்தக் காலத்தில் பூநகரியில் திருப்பாதம் ஊன்றிய கண்ணகி மறவன்குறிச்சி கிராமத்தில் பத்தினியா காடு எனும் தற்போது கூறப்படும் இடத்தில் களைப்பாறிய போது ஒரு வயோதிபப் பெண்ணிடம் கதைத்து விட்டு திடீரென மறைந்ததாக வாய்மொழிக் கதையாக உள்ளது. அதே நாள் மறவன்குறிச்சி மாடு மேய்க்கும் இடையர்கள் செல்லையா தீவில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது அங்கு நின்ற கொன்றல் மரத்தடியில் கிழவி வடிவில் கண்ணகி அமர்ந்தவாறு சிறுவர்களை அழைத்து தனக்கு பசிக்கிறது எனக் கேட்டு சாப்பாட்டுப் பொருட்களை வரவழைத்து சிறுவர்களுக்குக் கொடுத்து நெல் விதைக்கும் போது வித்த நாள் அபிஷேகம், பயிர்களின் நலன் வேண்டி பயிர்ப்பொங்கல் படைக்கும் போது கிழவி மறைந்ததாக சிறுவர்கள் பெரியவர்களிடம் கூறிய போது வந்தது அம்மன் என கொன்றல் மரத்தடியில் பூஜை வழிபாடுகள் செய்து வந்தனர். இவ் வழிபாட்டுத் தூய்மையால் இம் மக்கள் எல்லோரும் செல்வச் செழிப்பு உள்ள மக்களாக வாழிகின்றனர்.