ஆளுமை:சிவபாதசுந்தரம், செல்லப்பா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:32, 8 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லப்பா ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லப்பா சிவபாதசுந்தரம்
தந்தை செல்லப்பா
தாய் செல்லம்மா
பிறப்பு 1947.09.29
ஊர் திருக்கோணமலை
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இவர் திருக்கோணமலை மாவட்டத்தில் பல்வேறு பட்ட இந்து சமயம் சார் பணிகளையும், மக்கள் சார் சமூக சேவைகளையும் செய்த ஒரு சமூகசேவையாளர் ஆவார்.

இவர் செல்லப்பா, செல்லம்மா தம்பதியினருக்கு 1947 ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 29 ஆம் திகதி நான்காவது புதல்வராக திருக்கோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலய பகுதியில் பிறந்தார். இவர் சண்முகா மகா வித்தியாலயத்திலும், இ கி சா இந்துக் கல்லூரியிலும் தனது ஆரம்பக் கல்வியையும், உயர் கல்வியையும் கற்றதுடன், ஒரு நூலகராக திருக்கோணமலை மாவட்டத்தின் பன்குளம், முள்ளிப்பொத்தானை, உப்புவெளி, திருக்கோணமலை நகரம் என பல இடங்களில் பணியாற்றியுள்ளார்.

இவரது மனைவி பெயர் மகேஸ்வரி அம்மா. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இவர் 1969 ஆம் ஆண்டு திருக்கோணமலை இந்து இளைஞர் மன்றத்தினை உருவாக்கி, அதனூடாக பல சமூகம் சார், சமயம் சார் பணிகளை ஆற்றியுள்ளார். பின்னர் 1974 ஆம் ஆண்டில் திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையை உருவாக்கி, அதனூடாக திருக்கோணமலை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இந்து இளைஞர் மன்றங்களை அமைத்து அதன் மூலம் பல சமூகம் சார் சமயப் பணிகளை ஆற்றியுள்ளார்.

மேலும் 1983 ஆம் ஆண்டு லிங்கநகர் பகுதியில் இருந்த இவரது வீடு வன்செயலில் எரிக்கப்பட்ட பின்னர், அகதிகள் புனர்வாழ்வு பணியையும் தனது பிரதான பணியாகக் கொண்டு யுத்த காலத்தில் பல்வேறு பட்ட மக்களுக்கு தேவையான புனர்வாழ்வு பணிகளை ஆற்றியுள்ளார். மேலும் காந்தியம் அமைப்பு ஊடாக திருக்கோணமலையின் பல்வேறு இடங்களில் மீள் குடியேற்றம் மற்றும் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு பல மக்களுக்கு உதவி புரிந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சு ஊடாக இவருக்கு "தொண்டர் மாமணி" எனும் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் 1994 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சு ஊடாக "சிவஞானச் செல்வர்" எனும் பட்டமும் வழங்கி வைக்கப்பட்டது.

2007 வரை அகதிகள் புணர்வாழ்வு தொடர்பான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்ததுடன் 2009ம் ஆண்டு தனது 62 ஆவது வயதில் நூலகர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் அதன் பின்னர் உடல் நல குறைவு காரணமாக சமூகப் பணிகளில் இருந்து சற்று ஓய்வு நிலையில் காணப்படுகின்றார்.