நிறுவனம்:கிளி/ பத்தினிப்பாய் பிள்ளையார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:45, 8 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= பத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்தினிப்பாய் பிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் பூநகரி
முகவரி பத்தினிப்பாய்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


பூநகரிப் பிரதேசத்தில் மன்னார் வீதிக்கு குறுக்காகச் செல்லும் மண்டைகல்லாறு என்னும் இடத்திலிருந்து வடகிழக்கு மூலையாக 4 மைல் தொலைவில் காடும் குளமும் கொண்ட பக்தர்கள் கூடி பொங்கல் செய்து வழிபடும் இடமே பத்தினிப்பாய் ஆகும். இவ் ஆலயத்தில் பிள்ளையார், முருகன், அம்மன் எனும் பிரதான தெய்வங்களுடன் வைரவர்,முனி,ஐயனார்,விறுமர்,காளி கன்னிமார் எனும் 6 கொல்லைகள் அமைக்கப்பட்டு தெய்வங்களும் இவ் ஆலயத்தில் உண்டு. இத்தெய்வங்களுக்கு வளந்து வைத்துப் பொங்கல் செய்வது பாரம்பரிய முறையாகும். பொங்கல் விழாவானது ஆனி மாதத்தில் 3 நாட்கள் நடைபெறும். இங்கு காவடி, தீமிதிப்பு, பாற்செம்பு, கற்பூரச்சட்டி போன்ற நிகழ்வுகளுடன் அன்னதான நிகழ்வு இடம்பெறும். இங்கு பொங்கல் நடந்த மறுநாள் மோதக பூஜை இடம்பெறும். இங்கு நெய், எண்ணை, நீர் போன்றவற்றின் ஊடாக பொரித்து, அவித்து பிள்ளையார் உருவச்சிலைகள் மலை போல் குவிக்கப் படும்.