நிறுவனம்:கிளி/ புதுமுறிப்பு குளக்கட்டு கற்பக விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:37, 8 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= புதுமுற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புதுமுறிப்பு குளக்கட்டு கற்பக விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் புதுமுறிப்பு
முகவரி புதுமுறிப்பு
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


இவ் ஆலயம் 1954 ஆம் ஆண்டு சிறு கோயிலாக கிராமிய வழிபாட்டுத் தெய்வமாக இக்கிராம மக்களாலும் விவசாயச் செய்கையிலீடுபடும் விவசாயிகளாலும் வழிபடப்பட்டு வந்தது.காலஞ்சென்ற திருவாளளர் மு. ராமநாதன் அவர்களின் முயற்சியினால் 1992 ஆம் ஆண்டில் சிறந்த வழிபாட்டுத்தலமாகவும் ஆகம முறைப்படி பூசைகள், வழிபாடுகள் நடைபெறவும் வழி ஏற்பட்டது. ஆடி அமாவாசை அன்று தந்நையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களைச் செய்வதற்கு ஏற்றவாறு திருவிழா ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டு நித்திய நைமித்திய பூசைகள் நடைபெற வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தார். 1998 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இடப்பெயர்வின் பின்பு புனராவர்த்தனக் கும்பாபிஷேகம் நடைபெற்று ஆகம விதிப்படி நித்திய, நைமித்திய பூசைகள் இடம்பெற்றன. 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் போது காலம் சென்ற திரு இராமலிங்கம் அவர்கள் தலைவராக இருந்தார். இவர் இவ்வாலய விக்கிரகங்களையும் ஆலயத்தளபாடங்களையும் பாதுகாப்பாக வைப்பதற்காக இடப்பெயர்வின் போது தன்னுடன் கொண்டு சென்ற வேளை அவரும் அவருடைய மகனும் எறிகணைத்தாக்குதலுக்கு இலக்காகி காலம் சென்றதுடன் இவ்வாலயத்தின் வரலாறு நின்று விடவில்லை. தற்போது மீள்குடியேறிய மக்கள் தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்திலீடுபட்டு அதில் கிடைத்த வருமானத்திலிருந்தும், தண்ணீர்ப்பங்கு ஏலிவிற்பனை மூலம் கிடைத்த சிறுதொகையுடனும் தற்போது கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாலயக் கட்டுமானப்பணிகளுக்கு நிதியுதவி கிடைத்தால் இவ்வாலயம் சிறப்பாக அமைந்து மீண்டும் ஆடி அமாவாசை தீர்த்தத் திருவிழா எமது கிளிநொச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்ல வேறு மாவட்ட மக்களும் தமது பிதிர்க்கடன்களை இவ்வாலயத்தில் ஆற்ற முடியும் என்பதில் ஐயமில்லை.