ஆளுமை:புவனேஸ்வரன், சிவக்கொழுந்து

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:02, 8 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= புவனேஸ்வரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவனேஸ்வரன்
தந்தை சிவக்கொழுந்து
தாய் -
பிறப்பு 1949
ஊர் கோண்டாவில்
வகை கூட்டுறவாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவக்கொழுந்து புவனேஸ்வரன் அவர்கள் கோண்டாவிலில் (1949) பிறந்தார். இவர் 1953ஆம் ஆண்டில் வட்டக்கச்சியில் குடியேறினார். தனது ஆரம்பக் கல்வியை கிளி/வட்டக்கச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும்(தற்போதைய வட்டக்கச்சி மத்திய கல்லூரி) கல்விப் பொதுத் தராதர சாதரண தரம் மற்றும் உயர்தரக் கல்வியை யா/செங்குந்தா இந்துக்கல்லூரியிலும் கற்றார். 1988 ஆம் ஆண்டு தொடக்கம் 1992 ஆம் ஆண்டு வரை வவுனியா கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் பணி புரிந்தார். மாயவனூர் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும், வட்டக்கச்சி அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் தலைவராகவும், இரணைமடு வலதுகண் D3 கமக்கார அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் கௌரவ உறுப்பினராகவும் இருந்தார்.சமாதான நீதிவானாகவும் இருக்கின்றார்.