ஆளுமை:சந்திரகுமார், செல்லையா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:58, 7 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= சந்திரகுமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரகுமார்
தந்தை செல்லையா
தாய் பாக்கியம்
பிறப்பு 1961.11.19
ஊர் அரியாலை
வகை இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா சந்திரகுமார் 1961 ஆம் ஆண்டில் அரியாலையில் பிறந்தார்.ஆரம்பக் கல்வியை எட்டாம் வகுப்பு வரை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தார். திருமணத்தின் பின் புலோப்பளையில் வசித்து வருகிறார். 1980 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை மிருதங்கம் வாசித்து வருகின்றார். சுயமுயற்சியில் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு அதற்கேற்ப மேசைகளில் அடித்து வாசித்துப் பழகினார். பின் சொந்தமான மிருதங்கம் ஒன்றை சொந்தமாக வாங்கி தனது திறமையினை வெளிக்காட்டி மேடைக்கச்சேரிகளில் இசையமைத்துவருகின்றார். முதன் முதலில் அறத்திநகர் அம்மன் ஆலயத்தில் அண்ணாவியார் பொன்னுத்துரை அவர்களுடன் காத்தவராயன் கூத்துக்கு இசையமைத்தார். நாட்டுக்கூத்துகள் மற்றும் சினிமாப்பாடல்களுக்கும் இசையமைத்து வருகிறார். பளை நகரிலுள்ள கச்சார்வெளி வைரவர் ஆலயம், புலோப்பளை முருகமூர்த்தி ஆலயம், அறத்திநகர் வைரவர் ஆலயம், பளை இரட்டைக்கேணி அம்மன் ஆலயம், தர்மக்கேணி (சின்னத்தாளையடி )அம்மன் ஆகிய ஆலயங்களில் நடைபெற்ற கூத்துக்கள் நாடக நிகழ்வுகளுக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் முள்ளிப்பற்று இயக்கச்சி உப அலுவலக திறப்பு விழா நிகழ்வில் கலைஞர் கௌரவிப்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் பிரதேச சபையால் 2019 ஆம் ஆண்டில் “கலைத்துறை விருது“,2022 ஆம் ஆண்டில் “மிருதங்கக்கலைஞர் விருது“ ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.

கணபதிப்பிள்ளை இராசரத்தினம் (16.03.1930.) காரைநகரில் பிறந்தார். கமம், வியாபாரம் ஆகிய தொழில் செய்து வந்தார். காரைநகர்/சுப்பிரமணிய வித்தியாசாலை, காரைநகர்/இந்துக்கல்லூரி, யா/தின்னவேலி முத்துத்தம்பி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் சாதாரண தரம் (எஸ்.எஸ்.ஈ) வரை கல்வி கற்றார். 1955 ஆம் ஆண்டில் கிளிநொச்சிக்கு கமம் செய்வதற்காக வந்த மூத்த குடியானவர். கிளி/இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலையில் அபிவிருத்திக்காகப் பாடுபட்டதுடன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் செயற்பட்டார்.