ஆளுமை:ஆறுமுகம், கந்தவனம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:17, 7 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம்
தந்தை கந்தவனம்
தாய் மாரிமுத்து
பிறப்பு 1960.02.01
ஊர் களுவன்கேணி, மட்டக்களப்பு
வகை வேடமதகுரு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கந்தவனம் ஆறுமுகம் (1960.02.01) களுவன்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்த வேட மதகுரு. இவரது தந்தை கந்தவனம்;தாய் மாரிமுத்து. இவரது மனைவி சிவஜோதி. இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் மூன்று வரை களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். இன்று வரை இவர் தமது வேடமரபினையும், சடங்காசாரங்களினை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வேட மதகுருவாகவும், வேடப்பாட்டிசைக் கலைஞராகவும் காணப்படுகின்றார். அது மட்டுமல்லாமல் இன்றைய கால கட்டத்தில் தனது கிராமத்திலேயே வேட மொழியினை மிகவும் சரளமாகப் பேசக்கூடியவராகவும், ஊரில் எத்திக்கிலும் சடங்கு நடவடிக்கைகள் இடம் பெற்றாலும் அவற்றை முன்னின்று நடத்தக்கூடியவராகவும் காணப்படுகின்றார். வேடர் மொழி எனும் போது அவர்தம் சடங்கு நடவடிக்கைகளில், அவர்களினால் கடவுளராகக் கருதப்படும் அனைத்துக் கடவுளருக்குமான அழைப்புப் பாடல்கள், மன்றாட்டு அழைப்புக்கள், சொற்கள் என்பவற்றினை திறம்பட வேட மொழியில் பேசக்கூடியவராகவும் காணப்படுகின்றார். அது மட்டும் அல்லாமல் தனக்கு பின் தனது சந்ததியினருக்கு தம் மரபினைக் கடத்தும் வகையில் தனது மூத்த மகனுக்கு சகல விடயங்களினையும் படிப்பித்து அவரை ஒரு இளம் வேட மதகுருவாகவும், தனக்குத் துணையாகவும் செயற்பட வைத்துள்ளார்.