ஆளுமை:கனகரெத்தினம், நடராசா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:14, 7 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகரெத்தினம்
தந்தை நடராசா
தாய் யோகம்மா
பிறப்பு 1952.03.29
ஊர் இலக்கந்தை, மூதூர்,திருகோணமலை
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நடராசா கனகரெத்தினம் (1952.03.29) இலக்கந்தை, மூதூர், திருகோணமலைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை நடராசா ; தாய் யோகம்மா.இவரது மனைவி நாகேஸ்வரி. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் மூன்று வரை இலக்கந்தை அரச தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். இவர் தனது பூர்வகுடி சமூகம் சார்ந்த தேவைகளையும், தமக்கான உரிமை மீறல்களையும் நன்குணர்ந்து கொண்டு அதற்காக அமைப்பு ரீதியாக செயற்பட வேண்டிய தேவையினை நன்குணர்ந்தவர். அந்த வகையில் தமது சமூகம் எதிர்க்கொள்கின்ற சவால்களுக்கு நல்லூர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் ஊடாக பல நெடுங்காலமாக குரல் கொடுத்து வந்த இவர், அது பெரிதும் பயனளிக்காத வேளையில் தனது சமூகத்தாருடன் இணைந்து 2016.03.28 தொடக்கம் ‘குவேனி’ பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு “என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இன்று வரை செயற்பட்டுக் கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் அவ்வமைப்பின் ஊடாக, பிற சமூகத்தவர்களினால் பல இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளைப் பயன்படுத்தி கையகப்படுத்தப்பட்ட தமது மக்களின் நூற்றுக்கணக்கான காணிகளினை உரிய ஆவணங்களுடனும், நடைமுறைகளினுடனும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, இன்று தமது பூர்வீக நிலங்களை பகுதி பகுதியாக மீட்டெடுக்கும் செயற்பாட்டினையும் முன்னெடுத்துவருகிறார்.