ஆளுமை:முத்து, சிவமோகன்
பெயர் | சிவமோகன் |
தந்தை | முத்து |
தாய் | கனகம்மா |
பிறப்பு | 1958.06.05 |
ஊர் | கொடிகாமம் |
வகை | சமூக சேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்து சிவமோகன் (1948.11.24 -) நெடுந்தீவில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை நெடுந்தீவு பாதிரி வித்தியாலயத்திலும், மகா வித்தியாலயத்திலும் இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திலும் சா.த வரை கல்வி கற்றார். பட்டு உற்பத்திப்பண்ணையில் கல்வி பெற்று அங்கேயே தொழிலாளியாக இணைந்து பின்னர் மேற்பார்வையாளராக கடமையாற்றினார். போர் காரணமாக இந்நப்பண்ணை மூடப்படவே கமநல சேவை திணைக்களத்தில் பணியாளராக நியமனம் பெற்று விற்பனை முகாமையாராக பதவி உயர்வு பெற்றார். பாடசாலைக்காலத்தில் இளைஞர் விவசாயக்கழகத்திலும், விளையாட்டுக்கழகங்களிலும் பதவிகளை வகித்து வந்துள்ளார். விவசாயத்திட்டக்குழுக்களிலும் பதவிகளை வகித்துள்ளார். மாவடி அம்மன் ஆலயத்தின் செயலாளராக 14 வருடங்களாகவும், உறுப்பினராகவும் இருந்துள்ளார். மகிழங்காடு கமக்கார அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். இராமநாதபுரம் கமக்கார அமைப்பின் தலைவராகவும், இராமநாதபுரம் மேற்கு கமக்கார அமைப்பின் தலைவராகவும் இருந்தார். இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தை உருவாக்கி செயற்பட்டு வருகின்றார். கரைச்சிப்பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராக இருக்கின்றார். அத்துடன் இளையோரின் எதிர்காலம் இன்றே என்ற போதைக்கெதிரான அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராகவும் இருக்கின்றார்