ஆளுமை:குலசிங்கம், முருகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:06, 11 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குலசிங்கம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குலசிங்கம்
தந்தை முருகேசு
தாய் நல்லம்மா
பிறப்பு 1946.09.22
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குலசிங்கம், முருகேசு (1946.09.22 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை முருகேசு; தாய் நல்லம்மா. 1950 ஆம் ஆண்டில் கிளிநொச்சி உருத்திரபுரம் கிராமத்திற்கு வந்தார். ஆரம்பக்கல்வியை உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் கந்தரோடை ஸ்கந்தவரோதயா கல்லூரியிலும் கற்றார்.கரைச்சி தெற்கு ப.நோ.கூ. சங்கத்தில் பணியாற்றினார்.1972 ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத்தொடங்கினார். செந்தமிழ் கலாமன்றம் என ஒரு மன்றத்தை உருவாக்கி அதன் ஸ்தாபகராகவும், தலைவராகவும் இருந்தார். வடக்கும் தெற்கும் எனும் நிகழ்ச்சியிலும் நாடகங்களை நடித்துள்ளார். வில்லுப்பாட்டிலும் சிறந்து விளங்கினார். “பாவம் பரியாரி”, ”அப்புவுக்கு வாய்ச்சது ஐஞ்சு“, “நவீன யமன் தர்பார்“ போன்ற நகைச்சுவை நாடகங்களை தயாரித்தும் நடித்தும் வந்தார். “ஸ்ரீ வள்ளி“,“ சத்தியவான் சாவித்திரி“ போன்ற புராண நாடகங்களையும் நடித்தார். விவசாயம் சார்ந்த நாடகங்களையும் தயாரித்து நடித்துள்ளார். கிராம அபிவிருத்திச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளை வகித்தார்.கரைஎழில் விருது பெற்றுள்ளார்.