நிறுவனம்:யாழ்/ அரியாலை நாகதம்பிரான் கோயில்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:31, 9 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அரியாலை நாகதம்பிரான் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி அரியாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இவ்வாலயம் அரியாலை கிழக்கு கடற்கரைக்கு அருகில் காணப்படுகிறது. இவ்வாலய தோற்றம் தொடர்பாக கதை ஒன்று கூறப்படுகிறது. அதாவது சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் ந. பாலசுந்தரம் எனும் கடற் தொழிலாளி தனது வீட்டில் ஆடிப்பிறப்பு அன்று அவரது மனைவி பலகாரம் செய்து கொண்டிருந்தவேளை அவரது ஓலை வீடு தீப்பிடித்து எரியத்தொடங்கியது எனவும் அப்போது வீட்டினுள் கைக்குழந்தை இருந்தது எனவும் அவர்கள் அக்குழந்தைக்கு ஏதும் நிகழ்ந்து விட்டதோ என பதறிப்போய் பார்த்தபோது அக்குழந்தை வீட்டுக்கு வெளியே தவழ்ந்து சென்று இருந்தமையும் அக்குழந்தைக்கு அருகில் பாம்பு சென்ற அடையாளம் காணப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. எனவே நாக பாம்பு தனது குழந்தையை காப்பாற்றியது என்ற நம்பிக்கையில் இவ்வாலயம் அடிக்கல் நாட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இக் கோயில் 2015 ஆம் ஆண்டு புனருத்தாரணம் செய்யப்பட்டது எனவும் இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகபாம்பு வந்து பால்குடிப்பதாகவும் பாலசுந்தரம் என்பவர் கூறினார்.