நிறுவனம்:யாழ்/ அரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 9 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் {{{ஊர்}}}
முகவரி -
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோயில் (கோப்பர்குள பிள்ளையார் கோயில்) முகப்பு. A 9 வீதியிலிருந்து அரியாலை கிழக்கிற்கு செல்லும் பிரதான கிளை வீதியில் கோப்பர் குளம் என அழைக்கப்படும் அழகிய தாமரைக் குளத்தருகே இவ்வாலயம் அமைந்துள்ளது. பிள்ளையாரின் விக்கிரகம் ஒரு துரவின் அருகாமையில் கண்டெடுக்கப்பட்டு பூசித்ததனால் துரவடிப் பிள்ளையார் என நாமமிடப்பட்டது. பின்னர் குளமாக்கப்பட்டபோது குளமாக்கியவரின் பெயரினால் கோப்பர்குளம் என வழங்கலாயிற்று பிள்ளையாரையும் கோப்பர் குளப்பிள்ளையார் என அழைக்கலாயினர். இவ்வாலயத்தின் வரலாறு நூற்றாண்டைக் கடந்துள்ளது துரவடியில் கண்டெடுக்கப்ப்ட்ட விக்கிரகம் முதலில் ஓர் அரச மரநிழலில் சிறு கொட்டில் வைத்து பூசிக்கப்பட்டது. சில காலத்தின் பின்னர் 1912ஆம் ஆண்டு சின்னத்தம்பி சரவணமுத்து என்பவரால் சிறு ஆலயமாகக் கல்லினால் கட்டப்பட்டது. அவருக்குப்பின் பொறுப்பேற்ற சின்னத்தம்பி சுப்பிரமணியம் என்பவர் ஆலயத்தை மூலஸ்தானம், இரண்டாம் மூன்றாம் மண்டபங்கள் என விரிவுபடுத்தினார். 1936 ஆம் ஆண்டு முதல் 1955 வரை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தைச் சேர்ந்த அருளம்பலம் அவர்களும் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த S. R. கந்தையா அவர்களும் இணைந்தும் தனியாகவும் பராமரித்து வந்தனர். அவர்களின் காலத்தில் பலிபீடம், நான்காம் மண்டபம், மடப்பள்ளி, என்பன அமைக்கப்பட்டது. இவர்களின் காலத்தில் இவ்வாலயத்திற்கு வெளிமாவட்டங்களிலிருந்தும் பெருந்தொகையானோர் வருகை தந்தனர் காரணம் என்னவெனில் யாழ்ப்பாணத்து முதன்மைச் சித்தராகிய யோகர் சுவாமிகள் இவ்வாலயத்தில் குடிலமைத்து சில ஆண்டுகள் தியானம் செய்தமையே அக்காலத்தில் இலுப்பை, வேம்பு, போன்ற மரங்கள் கோயில் வளாகத்துடன் நாட்டப்பெற்று இன்னும் குளிர்ச்சியைத் தருகின்றது. 1955 இல் S.R. கந்தையாவுக்குப் பின் பொறுப்பேற்ற மூத்த தம்பி தாமோதரம்பிள்ளை அவர்கள் தனது சுகயீனம் காரணம் கார்த்திகேசு தம்பிமுத்துவிடம் பொறுப்புக்களைக் கையளித்தார். கா. தம்பிமுத்து அவர்கள் தமது புதல்வர்களின் உதவியோடு 1982ம் ஆண்டு வரை சிறப்பாக பராமரித்தார். இவரின் காலப்பகுதியில் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. புதிதாக வைரவருக்கு மண்டபமும் மணிக்கோபுரமும் புணருத்தாரணமும் செய்யப்பட்டது. அன்று முதல் வருடந்தோறும். அலங்காரத் திருவிழா சங்காபிஷேகம் சிவராத்திரி, நவராத்திரி பூசைகள் பிள்ளையார் கதைப்பூசைகள், திருவெம்பாவைப் பூசைகள் போன்ற பூசைகள் அடியார்களினால் சிறப்பாக செய்யப்படுகின்றது. 1982ஆம் ஆண்டு தம்பிமுத்து அவர்கள் காலமாவதற்கு முன்னரே தனது புதல்வர்களிடம் முழுப் பொறுப்பையும் ஆதனங்களின் உறுதிகளையும் எழுத்து மூலம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 1982முதல் 1995 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எழுந்தருளி எழுந்தருளிக்கென சிறுமண்டபம், ஐந்தாவது பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1995 அக்டோபர் முதல் 2011 ஏப்ரல் வரை இப்பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தென்பது யாவரும் அறிந்த விடயமே இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இராணுவ அனுமதியுடன் இரண்டு தடவைகள் ஆலயத்தைத் தரிசிக்கக்கூடியதாய் இருந்தது 2011ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்புடன் ஆலய பொங்கல் நடைபெற்றது பல திருப்பணிகள் நிறைவேறியுள்ளன. ஆலயப்பதிவும் இடம் பெற்றுள்ளது. இராணுவக் கொட்டில்களின் இடி பாடகற்றல், சேத மடைந்த ஆலயப் பகுதிகள், மடப்பள்ளி சீர்செய்தல், களஞ்சிய அறை அமைத்தல், வாகணப் கொம்பு செய்வித்தமை, வசந்தமண்டபம், முருகப்பெருமானின் வேல்பிரதிஷ்டை அறநெறிக்கட்டம், நவக்கிரக மண்டபம், சிவன் பார்வதி, மண்டபங்கள் சண்டேஸ்வரர் மண்டபம், உள்வீதி ஒரு பாதை, ஊர்தி, சகடை கிழக்கு பக்கம் முழுவதும் மதில் அமைத்தமை போன்ற திருப்பணிகள் நடந்தேறின. ஆலயத்திற்கு 15இற்கு மேலான ஆதனங்கள் சொந்தமாக உள்ளன. தென்னந்தோட்டவருமானத்தில் 1995ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆலயப்பராமரிப்பு நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் காடுகள் பற்றைகள் அழித்தல், அழிக்கப்பட்ட இடங்களில் தென்னம் பிள்ளைகள் வைத்தல் பராமரித்தல் போன்ற திருப்பணிகளும் நடைபெறுகின்றன.