நிறுவனம்:அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையம்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 9 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=அரியாலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையம்
வகை சனசமூக நிலையம்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் பெரியோர் பலரின் முயற்சியால் 1946ம் ஆண்டு தைமாதம் 16ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது இருப்பினும் சுமார் 7வருடங்களுக்கு ஸ்தம்பித்த நிலையிலேயே இருந்தது. பின்னர் புது விழிப்புணர்ச்சியுடன் இயங்கப்பெற்றது. 1952ம் ஆண்டு அவ்வூர் கவிஞர் மு. செல்லையா அவர்களால் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதன் முதலாவது தலைவராக திரு. வி. அரியகுட்டியவர்கள் பணியாற்றினார்கள் 1953ம் ஆண்டு மாசித்திங்கள் 23ம் திகதி மாநகரசபை உறுப்பினர் திரு. க. குகதாசன் தலைமையில் நிகழந்த 1வது ஆண்டு நிறைவு விழா நிலையத்தின் முன்னேற்றத்திற்கு பச்சை கொடி காட்டுவதாக அமைந்தது. இதன் பிரதி பலிப்பாக 2ம் ஆண்டு விழாவின் போது திரு. வே. ஐயாத்துரை அவர்களின் முயற்சியின் பேரில் “பதவி மோகம் “ எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. 1946ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சனசமூக நிலையம் நாடகத்துறைக்கு குறிப்பாக இசைப்பாரம்பரிய நாடககலைஞர்களையும், நாடகங்களையும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கே தந்த சிரீய சிறப்பை கொண்டுள்ளது. கவிஞர் ஐயாத்துரை, நடிகமணி, திரு. இரத்தினம், பிரபல நடிகர் ப. செல்வரத்தினம் திரு.கற்கண்டு ஆகிய கலைஞர்கள் இச்சனசமூக நிலையத்தினால் உருவாக்கப்பட்டவர்களும் இந்நிலைய வளர்ச்சிக்கும் உழைத்தவர்களும் ஆவார். பிரபல வர்த்தகரும் சமாதான நீதவானுமாகிய அமரர் இ. சண்முகம் அவர்களின் நிதியுதவியுடனும் கட்டிட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு 1971.09.02 அன்று உயர்திரு இ. சண்முகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்புவிழா கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து 2006ம் ஆண்டில் இந்நிலையத்தின் 60ஆண்டு வைரவிழா பெருவிமர்சையாக கொண்டாடப்பட்டு வைரவிழா மலரும் வெளியிடப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையத்தில் மேடையேற்றப்பட்ட நாடகங்களாக பதவி மோகம் சகோதரவிரோதி, பக்தியா பகல்வேடமா, அன்புச்சுடர், வசந்த வாழ்வு, சாவுக்குசவால், மணிமகுடம், வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஶ்ரீவள்ளி, சத்தியாவான் சாவித்திரி, அரிச்சந்திரா, கொஞ்சும் குமரி, காடியப்பன், கரிகாலன், கண்ணன் ராதை நடனம், சரஸ்வதி சபதம், கடமையும் பாசமும், அந்தஸ்து, தொடர்ந்த கதை முடிவதில்லை, கோபுரம் ஒன்று சரிகின்றது. என நீண்டு கொண்டே செல்கிறது இவ்வாறு அரியாலையில் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் பிறப்பிடமாக ஸ்ரீகலைமகள் பகுதி காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.