நிறுவனம்:யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:23, 9 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர்
முகவரி நாவலர் வீதி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், ஸ்தாபிதம் 1928.09.03 ஸ்ரான்லி துவிபாஷா பாடசாலை என்னும் பெயருடன் அக்காலத்தில் இலங்கையின் தேசாதிபதியாக இருந்த சேர் ஹோபேர் ஸ்ரான்லி அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.இப்பாடசாலையின் நிறுவகர் கெளரவ ஆறுமுகம் கனகரத்தினம் ஆவார். இப்பாடசாலை 1964 ம் ஆண்டு கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது. 1871 ஆம் ஆண்டில் பிறந்தவரும் கல்கத்தாவில் கல்வி கற்றவரும் வழக்கறிஞருமான ஆறுமுகம் கனகரத்தினம் அவர்கள் எமது கிராமத்தின் முன்னேற்றத்தில் ஈடுஇணையற்ற அக்கறை காட்டியவர் ஆவார். அன்றைய சூழ்நிலையில் ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் எமது ஊர் மக்களும் ஆங்கில கல்வியை பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் 1928 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மூன்றாம் திகதி அக்காலத்தில் இலங்கையின் தேசாதிபதியாக இருந்த சேர். ஹேபேட் ஸ்ரான்லி அவர்களால் தனது சொந்த காணியில் ஸ்ரான்லி கல்லூரியை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இது ஆரம்பத்தில் ஸ்ரான்லி துவி பாஷா பாடசாலை என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. இப்பாடசாலையை நிறுவிய கெளரவ ஆறுமுகம் கனகரத்தினம் அவர்கள் தமது பெயரை பாடசாலைக்கு சூட்டாமல் அதற்கு உதவியளித்த அக்காலத்து தேசாதிபதியாகிய ஸ்ரான்லியின் பெயரை பாடசாலைக்கு சூட்டினார். இது அக்காலப் பெருமக்களின் பண்பு ஆனால் இக்காலத்தின் கோலம் வேறு. கீர்த்தியை விரும்பாது பணிபுரிவோர்க்கு கீர்த்தி தானாகவே வந்து சேரும். நல்லூர், நாயன்மார்கட்டு , கொழும்புத்துறை, சுண்டுக்குளி என்னும் சூழவுள்ள ஊர்களில் வாழும் பிள்ளைகள் படிக்கத்தக்கதாக இவற்றுக்கு மத்தியிலுள்ள அரியாலை வட்டாரத்தில் கட்டப்பட்டது. இங்கு தமிழ், ஆங்கிலம் என்னும் இரு பாசைகளும் சமமாக படிப்பிக்கப்பட்டன. இதன் முதலாவது அதிபராக சி.ரி.அருணாச்சலம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். அத்துடன் சூழவுள்ள கிராமங்களிலுள்ள பயிற்சி பெற்றவர்கள் உதவி ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இரண்டு மூன்று வருடங்களாக பாடசாலை சிறப்புற்று விளங்கியது ஆனால் பின்னர் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. சூழவுள்ள கல்லூரிகளில் ஒரு மொழியில் அதாவது ஆங்கிலத்தில் மாத்திரமே கற்பித்தபடியால் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெறக்கூடியதாய் இருந்தது. அந்த அளவு தேர்ச்சி துவி பாஷா பாடசாலைகளிலே பெறமுடியாதிருந்தது. அரசாங்க உத்தியோகமும் மேற்படிப்பும் மேலும் பல சலுகைகளும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே கிடைத்தன. இவையே துவி பாஷா பாடசாலைகளின் வீழ்ச்சிக்கு காரணங்களாகும். எனவே இருமொழிக்கல்விமுறை சிறப்பானது அல்ல என உணர்ந்த பாடசாலை நிவாகத்தினர் திரு.சி.அருளம்பலம் அவர்களின் ஆலோசனைப்படி வித்தியாலயத்தை கட்டணம் அறவிடும் ஆங்கிலப் பாடசாலையாக மாற்றி அமைத்தனர். 1936 ஆம் ஆண்டளவில் இம்மாற்றமும் பலனளிக்கவில்லை மாணவர் தொகையில் வீழ்ச்சி நிலையே காணப்பட்டது. இதன் காரணத்தால் 1942 ஆம் ஆண்டு பாடசாலையை மூடிவிட்டு கல்வி அலுவலகம் ஆக்கும் பிரேரனைகள் முன்வக்கப்பட்டன. திரு.அருளம்பலம் அவர்கள் அரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலைக்கும் முகாமையாளராக இருந்தமையால் ஸ்ரான்லி பாடசாலையை மூடுவதைத் தடை செய்வதற்காக தமது பார்வதி வித்தியாசாலையில் இருந்த மத்திய, உயர்தர வகுப்புக்களை மூடி அப்பிள்ளைகளை ஸ்ரான்லியில் சேரச்செய்தார் இதனால் இப்பாடசாலை வித்தியாகந்தோராக மாற்றப்படுவது தடை செய்யப்பட்டது. தொடர்ந்து 1944 இல் ஸ்ரான்லி அரசினர் மத்திய மகா வித்தியாலயம் எனக்கல்லூரி தரமுயர்த்தப் பெற்று பெயர் மாற்றம் பெற்றது. அதேபோல் 1947 இல் ஸ்ரான்லி அரசினர் மத்திய கல்லூரி எனப்பெயர் மாற்றம் பெற்றது. நாளடைவில் நாடு நமதான போது நாட்டு பெரியவர்கள் நினைவு பேசும் வண்ணம் இடப்பெயர்கள், வீதிப்பெயர்கள் மாறிய வகையில் கல்லூரிகளின் பெயர்களும் மாறியமைந்த போது ஸ்ரான்லி கல்லூரி ஸ்தாபகர் பெயரால் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயமாக மலர்ந்து ஒளி பரப்பியது. கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய வரலாற்றில் 1988 இல் வைர விழா, 2003 இல் பவள விழா என்பனவும் சிறப்பாக கொண்டாப்பட்டு வைர விழா மலர் பவள விழா மலர் என்பனவும் வெளியிட்டமை குறிப்பிடதக்கதாகும் அத்துடன் விளையாட்டுத்துறைகென்ற பாரம்பரியத்தை கொண்ட சுற்றாடலில் அமைந்த இக்கல்லூரி பல வீர வீராங்கனைகளை உருவாக்கிய பெருமை இப்பாடசாலைக்கு உண்டு இங்கு பெரேரா, கனகரட்ணம் , அருளம்பலம் ,சோமசுந்தரம் என நான்கு இல்லங்களை கொண்டு வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெறுகின்றன அத்துடன் வணிகயோதி, அறிவியற்கதிர் போன்ற மலர்களும் வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடதக்க ஒன்றாகும்.

மகுட வாசகம் -’’ கற்றாங் கொழுகுக’’


வளங்கள்