நிறுவனம்ːகிளி/ மாயவனூர் வேளாங்கன்னி ஆலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:57, 28 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாயவனூர் வேளாங்கன்னி ஆலயம்
வகை கிறிஸ்தவ ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி மாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி
தொலைபேசி 0772636303
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

1983 ஆம் ஆண்டு மலையகத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் காடாக இருந்த மாயவனூர் பகுதியில் குடியமர்ந்தனர் அவர்கள் பெரும் பகுதியினர் ரோமன் கத்தோலிக்கத்தினைப் பின்பற்றினார்கள். 1988 ஆம் ஆண்டு அப்போது பங்குத்தந்தையாக இருந்த அருட்திரு எட்விக் மைக்கல் எனும் குருவானவரால் காடாக இருந்த தற்போது ஆலயம் இருக்கும் காணியில் சிறு ஓலைக் குடில் அமைத்து வேளாங்கண்ணி ஆலயம் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் கத்தோலிக்கர் அல்லாதவரும் அதிகமாக வழிபட ஆரம்பித்தமையால் இவ்வாலயம் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அருட்தந்தையாக இருந்த செபஸ்டியான் குருவானவரால் கனடாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சொரூபத்தினை வைத்து பழைய ஆலயத்தின் பின்புறமாக தற்போது உள்ள ஆலயம் அமைக்கப்பட்டு அதற்கென 7 ஏக்கர் அளவிலான ஒரு காணி ஒதுக்கப்பட்டது 2009 யுத்தத்தின் காரணமாக எதுவித சேதங்கள் இன்றி காணப்பட்டது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.