நிறுவனம்:கிளி/ ஐயப்ப சுவாமி ஆலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:48, 28 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= ஐயப்ப ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஐயப்ப சுவாமி ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி சில்வாவீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

சில்வா வீதியில் 278ஆம் இலக்க காணியில் கிழக்கு புறமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. 05.10.1953 ஆம் ஆண்டு வட்டக்கச்சி குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டபோது திரு வேலுப்பிள்ளை முருகன் என்பவருக்கு 268 ஆம் இலக்க காணி வழங்கப்பட்டது மனைவி பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வீட்டுக்காணியின் கிழக்கு புறம் மிகவும் அடர்ந்த காடாக காணப்பட்டது. 1954 ஆம் ஆண்டு ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் கூடிய நாளில் திரு.வே.முருகேசு அவர்களது மனைவி ரத்தினம் மூன்றாவது பிள்ளையாகிய வேலாயுத பிள்ளைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த போது தாயும் பிள்ளையும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். திடீரென தாய் விழித்தெழுந்து பார்த்தபோது குழந்தை இல்லாமை கண்டு கதறி அழுத வண்ணம் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்க, அனைவரும் ஒன்று கூடி பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். குழந்தை காணாமையால் மிகவும் வேதனையுடன் தேடிக் கொண்டிருந்தனர். காடுகளை வெட்டி காற்று உட்புகுந்து தேடிய வேளை திடீரென காட்டில் அப்பா என்ற சத்தம் காதில் கேட்டது உடனே பெரும் ஆவேசமாக காட்டுக்குள் உள்ளே வந்து பார்த்தபோது ஒரு பிள்ளை பெரிய காட்டாமணக்கு மரத்தின் பக்கத்தில் இருந்து வருவது பார்த்து, உயரமுடைய புற்று நடுவில் கை காட்டிய வண்ணம் சப்பாணி கொட்டிய நிலையில் இருந்ததை கண்டு சுவாமியர் மரங்களில் ஏறி புற்றில் இருந்து குழந்தையை தூக்கி கீழே வரும்போது குழந்தை சிரித்த வண்ணமாக இருந்ததாகவும் பிள்ளை தனது முகத்தில் இருந்து முசுருக்கு சூகை எறும்புகள் துடைத்து. குழந்தையை துன்பப்படும் தாயாரிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார். அவ்வேளையில் சுவாமிகளின் மனம் நொந்து துன்பப்படும் போது நான் ஐயப்பன் தானே உனது பிள்ளையை தூக்கி கொண்டு சென்றேன் யான் பிள்ளையைக் கொண்டு சென்று நிறுத்திய இடம் யான் முன்னொரு காலத்தில் இருந்த இடம் எனவே இவ்விடத்தில் கோயில் அமைத்து வழிபாடு செய்து வரும்படி கூறியதால், குறிப்பிட்ட காட்டை வெட்டி துப்புரவு செய்து ஐயப்பனுக்கு சூலம் வைத்து அனைத்து மக்களினதும் ஒத்துழைப்புடன் காரமடை, பூமடை என பல பூஜைகள் செய்து வந்தனர். அன்றிலிருந்து முருகேசு தாடி திரிசடை கோலத்துடன் இருந்தமையால் சுவாமி எனும் பெயர் வந்தது என அறியப்படுகின்றது. அன்றிலிருந்து வழிபாட்டு வந்த ஐயப்பன் கோவில் அன்னார் 2004 ஆம் ஆண்டு சமாதி அடைந்ததை தொடர்ந்து நிர்வாக குழுவினர் அயராத முயற்சியினால் பாரிய கட்டணமாக உருவாக்கப்பட்டு ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் 27-6-2007 ஆம் நாள் நடைபெற திருவருள் கூடியது.