ஆளுமை:தெட்சணாமூர்த்தி, கந்தசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:44, 30 சூன் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தெட்சணாமூர்த்தி
தந்தை கந்தசாமி
தாய் இராசமணி
பிறப்பு 1962.07.04
ஊர் முல்லையடி, பளை
வகை நாடகக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெட்சணாமூர்த்தி, கந்தசாமி (1962.07.04 -) முல்லையடி, பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவர் கே.ரி மூர்த்தி எனவும் அழைக்கப்பட்டார். இவரது தந்தை கந்தசாமி; தாய் இராசமணி, இவர் வகுப்பு ஐந்து வரை கல்வியை பளை மகா வித்தியாலயத்தில் பயின்றார். இவர் விவசாயக்கூலியாக இருந்தார்.

1973,1974 ஆம் ஆண்டுகளில் கல்வீட்டு ராசர் என்னும் அண்ணாவியாரின் நெறியாள்கையில் பவளக்கொடி எனும் நாடகத்தில் செங்கமலம் எனப்படும் அல்லிராணியினுடைய தளபதியாக பெண் பாத்திரத்தில் முதல் முதலில் அறிமுகமானவர். மிகுந்த பாராட்டைப்பெற்று பின் பல அண்ணாவியார்களுடன் இணைந்து இசை நாடகங்களை நடித்துள்ளார். பின் தானும் ஒரு அண்ணாவியாராக வரமுடியும் என்ற நம்பிக்கையில் மன்னிப்பு என்ற நாடகத்தை எழுதி தன் சகோதரர்கள் இருவருடனும் இணைந்து சகோதரர்களாக பாத்திரம் ஏற்று நடித்தார். இரத்தபாசம் என்ற நாடகத்தை எழுதி அதில் வில்லனாக நடித்துள்ளார். விநாயகர் கலைமன்றத்தினூடாக அடிமை ஜனங்கள் என்ற நாடகத்தினை எழுதி நெறியாள்கை செய்து அதில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றதுடன் இதன் பின்னர் கே.ரி மூர்த்தி என்றும் அழைக்கப்பட்டார் , மகுடம் காத்த மங்கை எனும் கற்பனைச்சரித்திர நாடகம் அதில் வில்லனாக நடித்தார். கரையைத்தொடாத அலைகள் , நினைவுகள் சாவதில்லை, சமாந்தரங்கள் சந்திக்கின்றன, இசைநாடகத்துறையில் வைரமுத்து அவர்களுடைய இணை நடிகர்களான வி.எம். செல்வராஜா, நற்குணம், செல்வரட்ணம், வில்லிசைக்கலைஞர் சின்னமணி ஐயா அவர்களுடன் இணைந்தும் சிறு சிறு பாத்திரங்கள் ஏற்று நடித்து பாராட்டைப்பெற்றவர். பல கலைஞர்களை உருவாக்கியுள்ளார். இவர் நாடகத்தேவைக்காக கராத்தே, சிலம்பம் போன்றவற்றை ஓரளவு பழகியுள்ளார்.

இவரது வளர்ச்சிக்கு இவரது துணைவியார் மிகவும் ஆதரவு வழங்கியதோடு நாடகங்களை எழுத்து வடிவமைப்பதிலும் சீராக்கம் செய்வதிலும், ஆலோசனை வழங்குதல், நடிகர்களுக்கு சேலை அணிவித்தல், அலங்காரம் செய்தல் போன்ற உதவிகளிலும் ஈடுபட்டார். 2014 ஆம் ஆண்டில் துணைவியார் புற்றுநோயினால் இவ்வுலகை நீத்தார்.