ஆளுமை:மகேந்திரன், கனகையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:50, 9 சூன் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= மகேந்திரன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேந்திரன்
தந்தை கனகையா
தாய் மாணிக்கம்
பிறப்பு 1952.08.01
இறப்பு -
ஊர் குமுழமுனை
வகை அரச சேவை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


மகேந்திரன், கனகையா (1952.08.01-) குமுழமுனை எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட அரச சேவையாளர்.. இவரது தந்தை கனகையா; தாய் மாணிக்கம். இவர் தனது ஆரம்பக்கல்வியை குமுழமுனைப்பாடசாலையிலும், க.பொ.த.சாதாரண தரம் வரை முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரியிலும், க.பொ.த உயர்தரத்தை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றார் இவர் நிர்வாக கிராம அலுவலராக வவுனியா மாவட்டச்செயலகம், நெடுங்கேணி வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவு,பூனகரி பிரதேச செயலர் பிரிவு, கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவு ஆகிய இடங்களில் கடமை புரிந்து ஓய்வு பெற்றார்.

1982இல் மருந்துக்கலவையாளராகவும் 1984-2010 வரை கிராம சேவையாளராக 26 வருடங்கள் துணுக்காய், கரைச்சி பிரதேசங்களில் கடமை புரிந்தார். கிளி.மாவட்டத்தமிழ்ச்சங்கத்தில் செயலாண்மைக்குழு உறுப்பினராகவும் , மத்தியஸ்தர் சபை உறுப்பினராகவும், அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் உள்ளார்.

இவர் கரைஎழில், கலைமாமணி, சிறந்த தமிழ் வளர்ப்பாளர், சிறந்த இலக்கிய பணி, சிறந்த சமூக சேவையாளர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.