ஆளுமை:புஹாரி, எம்.ஏ.ஸீ.எம்.

நூலகம் இல் இருந்து
Shihaf Aqil (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:04, 6 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புஹாரி, எம்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஹாரி, எம்.ஏ.ஸீ.எம்.
தந்தை அப்துல் காதிர்
தாய் கதீஜா உம்மா
பிறப்பு 03.08.1941
ஊர் சம்மாந்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஹாரி, எம்.ஏ.ஸீ.எம் அவர்கள் 03.08.1941 ஆம் திகதி சம்மாந்துறை மன்பதியில் பிறந்தார். இவரது தகப்பன் அப்துல் காதிர் இவர் சின்ன ஆலிம் என்று அழைக்கப்பட்டார். இவரது தாய் கோசுப்போடி ஆதம்பாவா கதீஜா உம்மா ஆவார். அக்காலத்தில் சம்மாந்துறையில் சஹீஹுள் புஹாரி ஓதக்கூடிய வழக்கம் காணப்பட்டது. தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை மெதடிஷ்ட மிஷன் பாடசாலையில் ஆரம்பித்தார். மேற்படிப்பை ஜூனியர் இங்க்லீஷ் எனும் ஸ்கூல் தற்போது உள்ள சம்மாந்துறை மத்திய பாடசாலையில் 6,7 ஆம் தரங்களை கற்றார். தனது தந்தையின் விருப்பப்படி மார்க்கக் கல்வியினை பயில்வதற்காக இந்தியாவிற்கு பயணம் சென்றார் அங்கு மதரஸாவில் சேர்வதற்கான வயது போதாது என்பதனால் அவரினை அங்கு சேர்க்க மறுக்கின்றார்கள். பிற்காலத்தில் இவரது முயற்சிகளை கண்ட மதரசா அதிபர் அவரை சேர்த்துக்கொள்கின்றார். பின்னர் இலங்கையில் உள்ள 1956 கபூரியா அரபுக் கல்லூரியில் இணைந்து 1964 ஆம் ஆண்டு வரை கற்று வெளியாகினார்.


வெளி இணைப்புக்கள்