ஆளுமை:அஸீஸ், ஆதம்பாவா
பெயர் | அஸீஸ் |
தந்தை | ஆதம்பாவா |
தாய் | ஆசியா உம்மா |
பிறப்பு | 25.05.1950 |
ஊர் | சம்மாந்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆதம்பாவா அசீஸ் என்பவர் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் ஊரில் 1950.05.25 ஆம் திகதி பிறந்தவராவார். இவர் தனது ஆரம்பகால கல்வியினை மெதஷ்ட மிஷன் கலவன் பாடசாலையிலும் மேல்படிப்பினை சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார். இவரது தந்தையின் பெயர் அபூபக்கர் ஆதம்பாவா ஆவார். தாயின் பெயர் வரிசயும்மா என்றும் ஆசியா உம்மா என்றும் அழைக்கப்படுவார். இவர் சிறுவயது முதலே வியாபாரத்தில் ஈடுபாடு உடையவராகவும் சுய தொழில் ஆர்வம் கொண்டவராகவும் காணப்பட்டார் அதே போல கலைத்துறையிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒருவராக காணப்பட்டார். இவர் சிறுவயது முதல் வாசிப்பில் கொண்ட அலாதி பிரியத்தினால் தானும் எழுத்து துறைக்குள் ஈர்க்கப்பட்டார் 1968 ஆம் ஆண்டு முதல் சம்மாந்துறை அசீஸ் என்ற நாமத்தில் பத்திரிக்கை வானொலி மற்றும் தொலைகாட்சி என்பவற்றில் தனது கவிதைகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார், இவர் கடையில் பூத்த கவிதை என்ற ஒரு நூலும் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்