ஆளுமை:பாலேந்திரா, க.

நூலகம் இல் இருந்து
Tharsiga (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:34, 15 பெப்ரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலேந்திரா
பிறப்பு
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலேந்திரா, க. யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவர் 1972 ஆம் ஆண்டு கட்டுப்பத்தைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர் கல்லூரிக்காலத்தில் கலைகளுடனும் கலைஞர்களுடனும் தொடர்பை வளர்த்துக்கொண்டார். இவர் 1983களின் பின்னர் பிரித்தானியாவில் குடியேறினார்.

கல்லூரிக்காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் 'நுட்பம்' சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலுமாக இதுவரையில் சுமார் அறுபதிற்கும் அதிகமான நாடகங்களை நெறிப்படுத்தியுள்ளார். இவர் இயக்கிய நாடங்களில் கூடுதலானவை சுயமொழி நாடகங்களாகும். இவர் புகழ் பெற்ற பல மொழிபெயர்ப்பு நாடகங்களையும் இயக்கியுள்ளார். இவர் மழை, கண்ணாடி வார்ப்புகள், முகமில்லாத மனிதர்கள், ஐயா எலக்சன் கேட்கின்றார், யுகதர்மம், எரிகின்ற எங்கள் தேசம், ஒரு பாலை வீடு, மன்னிக்கவும் போன்ற புகழ்பெற்ற நாடகங்களை இயக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 293-295
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 45-48


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாலேந்திரா,_க.&oldid=502349" இருந்து மீள்விக்கப்பட்டது