ஆளுமை:மோகநாதன் வைரவன்
பெயர் | மோகநாதன் |
தந்தை | வைரவன் |
தாய் | லட்சுமி |
பிறப்பு | 14.11.1960 |
ஊர் | இளவாலை, யாழ்ப்பாணம் |
வகை | நாடக கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மோகநாதன் வைரவன் (1960 - ) இளவாலை, யாழ்ப்பாணம். இவரது தந்தை வைரவன். தாய் லட்சுமி. க.போ.த சாதரண தரம்வரை கல்வியைக் கற்றார். சிறுவயதிலேயே பல் வேறு தொழில்களை செய்து வந்தாலும் 1983ஆம் ஆண்டிற்கு பின்னர் முந்திரிகை தோட்ட வேலையில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றுள்ளார்.
எழுத்து, கவிதை, நாடகம்போன்ற துறைகளில் ஆர்வமாக செயற்பட்டு வந்துள்ளார். இசைநாடகம், நவீன நாடகங்களிலும் நடித்துள்ளார். பெண் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் கலைஞராகவும் இருந்த இவர் செம்முகம் ஆற்றுகை குழு மக்கள் களரி போன்ற நாடக குழுக்களுடன் இணைந்து குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் மொழிபெயர்பு நாடகமான “அன்பமுதூறும் அயலார்“ ஸ்ரீலேக பேரின்ப குமார் அவர்களின் ”ஸிமாகவின் கனிந்த இரவு” போன்ற நாடகங்களிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சிறுபான்மைத்தமிழர் மகா சபையின் உறுப்பினராக உள்ளார். கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் அரம்ப காலத்தில் உறுப்பினராக இருந்துள்ளார்.