ஆளுமை:முகம்மது முகைதீன்,அகமது லெவ்வை

நூலகம் இல் இருந்து
Shihaf Aqil (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:58, 23 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முகம்மது மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது முகைதீன்
தந்தை அகமது லெவ்வை
தாய் மரியங்கண்டு
பிறப்பு 1920.08.20
ஊர் சாய்ந்தமருது
வகை நிர்வாகத்துறை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது முகைதீன்,அகமது லெவ்வை (1920.08.20-) சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு நிர்வாகத் துறை ஆளுமையாவார். இவர் இஸ்மாலெவ்வை அகமதுலெவ்வை மற்றும் அபூபக்கர்லெவ்வை மரியங்கண்டு தம்பதிகளின் 5 வது புதல்வராவார். ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை காரைதீவு இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்திலும் கற்று S.S.C. சித்தியடைந்து 01 02-1947இல் BT / காங்கேயன் ஓடை அரசினர் T.B.S இல் உதவி ஆசிரியராக நியமனம் பெற்று 31-01-1948 வரை கடமையாற்றினார் .

01-02-1948இல் இருந்து 31-07 1950 வரை அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார் . சாய்ந்தமருதின் பயிற்றப்பட்ட முதலாவது ஆசிரியர் என்ற பெருமை இவரையே சாரும் . 9 வருடங்கள் 5 மாதங்கள் ஆசிரியராகவும் 22 வருடங்கள் 1 மாதம் தலைமை ஆசிரியராகவும் பல பாடசாலைகளில் சிறப்பாக சேவையாற்றினார் . 01-07-1956 முதல் 31 12-1962 வரை தலைமை ஆசிரியராக இருந்து A / கனந்தற கட்டுக் கெலியாவ பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தினார் . அவ்வூரில் ஒரு பள்ளிவாசல் உருவாக்குவதிலும் முன்னின்று பாடுபட்டார் . 01-01-1962 தொடக்கம் 28 02-1973 வரை சாய்ந்தமருது G.M.B.S. பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருந்து பாடசாலை அபிவிருத்தி , கல்வி அபிவிருத்தி போன்றவற்றில் ஆகக் கூடிய கவனம் செலுத்தி பல கல்விமான்கள் உருவாகுவதற்கு களமமைத்தமை பாராட்டுக்குரியது . 01-03 19-08-1978 ஓய்வுபெறும் வரை 1973 இல் 3 ஆம் தர அதிபரானார் . 01-03-1973 - ஒலுவில் அல் - ஹம்றாம . வித்தியாலயத்தில் அரும் பணியாற்றினார்.