ஆளுமை:ஆதம்பாவா, அப்துல் காதர்

நூலகம் இல் இருந்து
Shihaf Aqil (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:31, 14 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஆதம்பாவா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆதம்பாவா
தந்தை அப்துல் காதர்
பிறப்பு 1943.10.18
இறப்பு 2020.04.13
ஊர் சாய்ந்தமருது
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆதம்பாவா, அப்துல் காதர் (1943.10.18 - 2020.04.13) சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு கலைஞர் ஆவார். இவரது தந்தையின் பெயர் அப்துல் காதர். இவர் இனிமையான குரலில் பாடக்கூடிய ஒரு கலைஞர் ஆவார் அதிலும் உசைன் பக்கீர் பைத் எனும் வழிபாட்டுப் பாடலில் மிகப் பிரசித்தமானவராவார்.

கலாசாரத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட பல றபான் இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில்களை வென்றவர். மருதம் தக்வா கோலாட்டக் குழு என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பினை உருவாக்கி வழிநடாத்திய இவர் பொல்லடிக் குழுவிற்குத் தலைவராகவும் அண்ணாவியாகவும் இருந்து பொல்லடிக் கலையை முன்னெடுத்து வந்தார். அத்தோடு பொல்லடிக் கலையை இளம் சமுதாயத்தின் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பாடசாலை மாணவர்களிலிருந்து பல பொல்லடிக் குழுக்களை உருவாக்கினார்.

பக்கீர் பாவாக்களின் கலீபாப் பட்டம் பெற்ற இவர் கலாபூசணம் விருது, கிழக்கு மாகாணதத்தின் முதியகலைஞர் என்று உயர் விருது விருதுகளைப் பெற்றதோடு சான்றிதழ்கள் பாராட்டுக்கள் பல பெற்ற இவர் 13.04.2020 ம் திகதி காலமானார்.