கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்)
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:39, 13 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்) | |
---|---|
நூலக எண் | 61738 |
ஆசிரியர் | - |
நூல் வகை | பாட நூல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | உயர் கல்வி நிறுவனம் |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | 70 |
வாசிக்க
- கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்)
- இராமன் முதலியோர் கிட்கிந்தை மலையை அடைதல்
- வாலியைக் கொல்லும் உபாயத்தை ஆராய்தல்
- இராமனது கருத்துக்கு சுக்கிரீவன் இசைதல்
- சுக்கிரீவனது போர் முழக்கம் உறங்கும் வாலியின் செவியிற் சென்று சார்தல்
- போருக்குச் செல்ல வேண்டாம் என வாலியை தாரை விலக்குதல்
- வாலி அவள் தடையை மீறுதல்
- சுக்கிரீவன் வலிய துணையினைப் பெற்றே போருக்கழைத்திருக்கிறான் எனத் தாரை கூறுதல்
- வாலி தன் பேராற்றலை எடுத்துக் கீறித் தேற்றுதல்
- சுக்கிரீவனுக்குத் துணையாக இராமன் என்பவன் நின்னைக் கொல்லுதற் பொருட்டு வந்துள்ளான் எனத் தாரை கூறுதல்
- வாலி, இராமனுடைய நற்பண்புகளை எடுத்துரைத்து தாரையின் கூற்றினை மறுத்தல்
- போர் வேட்டெழுந்து வாலி ஒரு குன்றின் புறத்தே வந்து தோன்றுதல்
- வாலியின் வீரத் தோற்றம்
- வாலி, சுக்கீரிவனை எதிர்ப்பட்டு ஆரவாரித்தல்
- வாலி சுக்கிரீவரது போர்த் தோற்றத்தைக் கண்டு வியந்த இராமன், அதனை இலக்குவனனுக்குக் காட்டிக் கூறுதல்
- சுக்கிரீவரது வேவாச் செயல் நினைந்து உணர்விழந்தேன் என இலக்குவன் கூறுதல்
- இலக்குவனுக்கு இராமன் ஏற்ற மறுமொழி பகர்தல்
- வாலி சுக்கிரீவர் இருவரும் நெருங்கிப் பொருதல்
- இருவரும் சாரி திரிதல்
- இருவரும் தாக்கிப் பொருதலால் தீ எழும் தோற்றம்
- அவ்விருவரும் சுந்தோப சுந்தரை யொத்துத் தோன்றுதல்
- இருவரும் செய்த பெரும் போர்
- இருவரது கடும் போரைக் காண அஞ்சித் தேவர்கள் ஓடி மறைதல்
- இருவரும் வானிலும் மண்ணிலும் தொடர்ந்து ஓடிப் பொருதல்
- அவ்விருவரது போர் முழக்கமும் குத்துதலின் ஓசையும்
- ஒருவரையொருவர் கடித்தலாற் பொடித்த இரத்தம் விண்மீன்களிலும் ம்ர்ர்கத்திலும் படிந்த தோற்றம்
- வாலியின் தோள்களும் சுக்கிரீவன் மார்பும் தகர்தல்
- இருவரும் செய்த போர்ச் செயல்கள்
- வாலி சுக்கிரீவனைத் தாக்கி வகுத்தல்
- வாலியால் தாக்கப்பட்டு வருந்திய சுக்கிரீவன் இராமனையடைந்து அவன் பணித்தவாறு அடையாள மாலை மிலைந்து சென்று பொருதல்
- சுக்கிரீவன் வாலியைத் தாக்குதல்
- வாலி சுக்கிரீவனை உயிர்தலத்தில் புடைத்து உதைத்தல்
- வாலியினால் நெருக்கப்பட்டுக் கலங்கிய சுக்கிரீவன் இராமனிருக்கின்ற திசை நோக்கி விழித்தல்
- வாலி சுக்கிரீவனை நிலத்தில் மோதுவதற்குப் பற்றி மேலே தூக்கிய பொழுது இராமன் வாலியின் மேல் அம்பு செலுத்துதல்
- இராமபாணம் வாலியின் மார்பை எளிதிற் துளைத்தல்
- வாலி கலங்கி விழுதல்
- வாலி, சுக்கிரீவனைப் பற்றிய பிடியில் நெகிழ்ந்து, தன் மார்பில் தைத்த அம்பினைக் கையினால் இறுகப் பற்றுதல்
- வாலியின் சீற்றமும் ஐயமும்
- வாலி தன் மார்பில் தைத்த அம்பினைப் பற்றிப் பறிக்க முயன்று பறிக்க வராமையின் வருந்துதல்
- வாலி, தன் மேல் படைக்கலம் எய்தோர் யாவரோ என ஐயுறுதல்
- வாலி, தன்னுயிரை வாங்கிய படைக்கலம் எத்தகையதோ என ஐயுறுதல்
- வாலி, தன்னுயிரைக் கவர்ந்த படைக்கலத்தின் அற்றலை வியந்து அப்படைக்கலம் அம்பு என்பதனைக் கண்டறிதல்
- அம்பினை எய்தவன் பெயர் யாதென அறிய எண்ணி வாலி தன் வன்மையால் அதனைப் பறித்தெடுத்தல்
- வாலி அம்பினைப் பறித்த அளவில் அவனது மார்பினின்றும் உதிரம் வெள்ளமென்ப் பெருகுதல்
- வாலியின் மார்பிற் பெருகிய குருதிப் பெருக்கத்தக் கண்ட சுக்கிரீவன் உடன்பிற்ப்பெனும் பாசத்தால் கண்ணீர் மல்கி நிலத்தில் வீழ்தல்
- தன் மார்பில் தைத்து வருத்திய அம்பினைப் பறித்தெடுத்த வாலி அதன்கண் இராமனது பெயர் பொறிக்க பெற்றிருத்தலைக் காணுதல்
- இராமனது செயல் நினைந்து வாலி நாணி வருந்துதல்
- இராமனைக் கண்ணுற்ற வாலி, நின் செயல் முறையற்றது எனக் கூறி இகழ்தல்
- வாலியின் மொழிகளுக்கு இராமன் மறுமொழி கூறுதல்
- இராமன் கூறிய மாற்றங்களுக்கு வாலி எதிர்மொழி பகர்தல்
- குற்றமுற்றிலேன் என வாலி கூறிய மொழிகளை இராமன் மறுத்து, அவன் செய்த செயல் குற்றமுடையதே என்பதனை வலியுறுத்தல்
- நேர் நின்று அம்பு எய்யாமல் மறைந்து நின்று அம்பு எய்தது எது கருதி என வாலி இராமனை வினாதல்
- வாலியின் வினாவுக்கு இலக்குவன் விடை பகர்தல்
- வாலி, தனக்கு மெய்யுணர்வருளிய இராமனைப் போற்றி வரம் வேண்டுதல்
- வாலி மற்றும் ஒரு வரம் வேண்டுதல்
- வாலி, இராமனுக்கு உதவ முடியாத தன்னிலைமையை நினைந்து இரங்கி, இராமனுக்கு அனுமனைப் பற்றித் தகவுரை பகர்தல்
- வாலி, தன் தம்பி சுக்கிரீவனை அன்பினால் அணைத்து உறுதியுரை பகர்தல்
- வாலி, சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலமாக ஒப்புவித்தல்
- வாலி, சுக்கிரீவனைக் கொண்டு அங்கதனை அழைத்து வரச் செய்தல்
- அங்கதன் வாலியைக் காணுதல்
- அங்கதன் வாலியின் மீது வீழ்ந்து புலம்புதல்
- வருந்திய அங்கதனை வாலி தழுவித் தேற்றுதல்
- வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறுதல்
- அங்கதனுக்கு உறுதியுரை கூறிய வாலி, இராமனை நோக்கி இவ் அங்கதன் உன் கைபடைப் பொருளாவான் எனக் காட்டுதல்
- அங்கதனை இராமன் ஏற்றுக்கொள்ள வாலி பரமபடஹ்ம் அடைதல்
- தாரை புலம்புதல்
- அனுமன், வானர மகளிரைக் கொண்டு தாரையை அந்தப்புரத்துக்கு அனுப்பிவிட்டு, வாலிக்கு இறுதிக்கடன் செய்வித்து இராமனையடைந்து நிகழ்ந்தன கூறல்
- சூரியன் மறைதலும் இராமன் இரவுப் பொழுதைக் கழித்தலும்