பகுப்பு:ஞாயிறு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:08, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
ஞாயிறு இதழ் யாழ்ப்பாணம் கலா நிலைய வெளியீடாக 1933 இல் வெளியானது. கலை ஆக்கம் கருதிய வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இது இரு திங்கள் இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக சுவாமி உருத்திரகோடீஸ்வரர் அவர்களும், துணையாசிரியராகவும், பொறுப்பாளராகவும் க.தி.நடேசராஜா அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதழாக்கக் குழுவில் எழுவர் கடமையாற்றியுள்ளனர். இதன் உள்ளீடுகளாக யாழ்ப்பாண கலா நிலைய நோக்கம் செயல்கள் என்பவற்றுடன் இலக்கியம் , தத்துவஞானம், பௌதிக சாத்திரம், ஓவியம், நாகரிகம், சரிதம், கலையாக்கங்ள் சார்ந்த பல அரிய கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியானது. இதன் சொல்நடையானது மிகத்தூய நடையில் காணப்படுகின்றது.
"ஞாயிறு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.