நிறுவனம்:செம்முகம் ஆற்றுகைக்குழு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செம்முகம் ஆற்றுகைக்குழு
வகை நாடகக் குழு
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நீர்வேலி
முகவரி நீர்வேலி மேற்கு, நீர்வேலி.
தொலைபேசி 0779265299,0772154053
மின்னஞ்சல்
வலைத்தளம்

செம்முகம் ஆற்றுகைக்குழு (2010) “புதிய வாழ்விற்கான அரங்கப்பயணம்” எனும் நோக்கை அடிப்படையாகக்கொண்ட சுயாதீன ஆற்றுகைக்குழு. இதன் இயக்குணர் சத்தியசீலன்,கறுப்பையா. மக்கள் வாழ்வியலோடு கலந்திருக்கும் கலைகளை பேணியும் தேவைக்கேற்ப ஆற்றுகைசெய்தும் வருகின்றது. கூத்துக்கள், மேடை நாடகங்கள்,தெருவெளி நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், கலந்துரையாடல் ஆரங்கு, பொம்மைகள் அரங்கு போன்றவற்றை ஆற்றுகைசெய்து வருகின்றனர்.

இளையோரின் மென் திறன் விருத்தி, ஆளுமைவிருத்தி மேம்பாட்டிற்காக அரங்கை பிரயோகிப்பதுடன், அரங்கினூடாக மக்களின் அரசியல், சமூக,ஜனநாயக,பண்பாடு,ஊரிமைகள்,கடமைகள் பேன்ற முரண்களை தீர்வை நேக்கிக் கொண்டுசெல்வதை முக்கியசெயற்பாடகக்கொண்டுள்ளது.

2017 தேசிய கலை இலக்கியப்புரவையின் 44வது மாநாட்டில் “கந்தன் கருணை” நாடகத்தின் பகுதியொன்று இக்குழுவால் ஆற்றுகை செய்யப்பட்டது. புத்தூர் மயாணம் அகற்றல் பேராட்டதில் கலைஞர்கள் சார்பாக கலந்துகொண்டதோடு நாடக செயற்பட்டையும் மேற்கொண்டதனர். இலங்கையில் இனப்பிரச்சனை வலுப்பெற்ற பின்னர் சாதிய முரணை அரங்கங்கினூடா பேசிய நாடகக்குழு இதுவேயாகும்.