பகுப்பு:பார்வை (கனடா)
பார்வை ஈழவிடுதலைப்போராட்டங்கள் முனைப்புப் பெற்ற 1985 காலப்பகுதிகளில் கனடாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த மாத இதழாக காணப்படுகின்றது. இது விடுதலைப் போராட்டங்களுடன் பல்சுவை விடயங்களையும் பேசிய இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக செல்வம் அவர்கள் காணப்பட, இணையாசிரியராக ஜெயராஜ் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை கனடாவின் தமிழர் ஒளி வெளியிட்டுள்ளது. இவ்விதழின் கட்டமைப்பானது சில ஆக்கங்கள் கையெழுத்துப் பிரதிகளாகவும், சில ஆக்கங்கள் கணினி தட்டச்சு பிரதிகளாகவும் என இணைந்து 50 பக்கங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக விடுதலைப்போராட்ட விளைவுகள், போராட்ட இயக்கங்களின் தன்னிச்சையான செய்றபாடுகள் பற்றிய விமர்சனக் குறிப்புக்கள், இலக்கியம், தேசியவாதம், சினிமா மற்றும் சிறுவர் பகுதி முதலான பகுதிகள் காணப்படுகின்றன.
"பார்வை (கனடா)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.