பகுப்பு:கா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:36, 30 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கா இதழ் 2005 ஆவணி தொடக்கம் மட்டக்களப்பில் இருந்து இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியர் குழாத்தினராக ச.மணிசேகரன், வி.கௌரிபாலன், திசேரா, கிக்கோ முதலியோர் அங்கம் வகித்தார்கள். இதனை மட்டக்களப்பு 'கா' இலக்கிய வட்டத்தினர் வெளியிட்டுள்ளனர். அக்கால கட்ட இலக்கிய உலகின் நவீன உடைப்புக்கான இதழாக புதிய சிந்தனை மிக்க படைப்புக்கள் உடன் இதன் வெளியானது. இதன் உள்ளடக்கங்களாக கிராமியக் கலை, கலைஞர் அறிமுகங்கள், நாடகம் சார் விடயங்கள், கவிதைகள், சிறுகதைகள் என்பன காணப்பட்டுள்ளன. துரதிஸ்டவசமாக இது தனது முதல் வருகையுடன் இடைநிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.