ஆளுமை:செல்வம், முனியாண்டி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 14 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை1| பெயர்=செல்வம்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வம்
தந்தை முனியாண்டி
தாய் அன்னமுத்து
பிறப்பு 1970.04.04
ஊர் கிளிநொச்சி, இயக்கச்சி
வகை நாட்டுக்கூத்து கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வம், முனியாண்டி (1970.04.04 - ) இயக்கச்சி, பனிக்கையடியை பிறப்பிடமாகக் கொண்ட நாட்டுக்கூத்து கலைஞர். இவரது தந்தை முனியாண்டி; தாய் அன்னமுத்து. இவர் தனது ஆரம்பக் கல்வியை பளை மகாவித்தியாலத்தில் மேற்கொண்டார்.

இவருக்கு கூத்து நடிப்பதில் ஏற்பட்ட விருபத்தினால் அண்ணாவி ஆறுமுகத்திடம் 1990 ஆம் ஆண்டுகளில் கூத்து பழகத் தொடங்கினார். அண்ணாவி ஆறுமுகத்துடன் சேர்ந்து முத்துமாரி, காத்தாடி, சாம்பு, நெல்லைக்கண்ணன் பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் பாலமுருகன் கலை மன்றத்தின் ஸ்தாபகர் ஆவார். பாலமுருகன் கலை மன்றத்தின் ஊடாக பல்வேறு கலை செயற்பாடுகளை இயக்கச்சி, பனிக்கையடி கிராமத்திற்கு ஆற்றி வருகிறார்.அத்துடன் ஒவ்வொரு வருடமும் இவர் மாணவர்களுக்கு பாடசாலையை மையமாகக்கொண்டு கூத்துக்களை பழக்கியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச கலை விழாக்கள் மாவட்ட கழக விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பிரதேச மாவட்ட மட்டங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.