ஆளுமை:இராமச்சந்திரன், பரமநாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:59, 13 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (" {{ஆளுமை1| பெயர்= இராமச்சந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமச்சந்திரன்
தந்தை பண்டாரி பரமநாதன்
தாய் பரமநாதன் ஆச்சிமுத்து
பிறப்பு 1950-01-06
ஊர் கிளிநொச்சி, வட்டக்கச்சி
வகை வட்டக்கச்சி மூத்த குடி,யோகாசனம்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமச்சந்திரன், பரமநாதன் அவர்கள் (1950-01-06 - )யாழ்ப்பாணம், பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட வட்டக்கச்சியின் மூத்த குடியும், யோகாசனம் ஆசிரியரும் ஆவார். இவரது தந்தை பரமநாதன்; தாய் ஆச்சிமுத்து. கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்றார். தொடர்ந்து யாழ்ப்பாணம் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் இடைநிலை மற்றும் உயர்தரத்தை கற்றார்.

1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1978 ஆம் ஆண்டு வரை பலாலி ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆம் மாதம் 24 ஆம் திகதி விவசாய ஆசிரியராக கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா மகா வித்தியாலயத்தில் முதல் ஆசிரியர் பணியினை தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1978 ஆம் ஆண்டு வரை பலாலி ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

பின்னர் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 1991ஆம் ஆண்டு வரை விவசாய பாட ஆசிரியர் சேவைக்கால ஆலோசகராக கடமையாற்றினார். 1992ஆம் ஆண்டு தொடக்கம் 1995 ஆம் ஆண்டு வரை பூநகரி வலய தொலைக்கல்வி மற்றும் சிரேஷ்ட போதனாசிரியராக கடமையாற்றினார். அதன் பின் 1995 ஆம் ஆண்டு கிளிநொச்சி பன்னங்கண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும், கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்திலும் அதிபராக கடமையாற்றினார். 2008-01-06 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்பு மன்னார் மாவட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சி போதனாசிரியராக பணியாற்றினார்.