ஆளுமை:குமரவேல், இன்பராசா
பெயர் | குமரவேல் |
தந்தை | இன்பராசா |
தாய் | நாகம்மா |
பிறப்பு | 1958.06.03 |
ஊர் | கிளிநொச்சி, புலோப்பளை |
வகை | நாடகக்கலைஞர்,அண்ணாவி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமரவேல், இன்பராசா அவர்கள் (1958.06.03 - ) கிளிநொச்சி, புலோப்பளையை பிறப்பிடமாகக் கொண்ட நாடகக்கலைஞர் மற்றும் அண்ணாவி ஆவார். இவரது தந்தை இன்பராசா; தாய் நாகம்மா.
பாடுமீன் இசைக் கலாமன்றத்தின் செயலாளராக உள்ளார். தற்போது இரணைமாதாநகர் கிராமத்தின் முன்னேற்றத்திற்கான அனைத்து பொதுப் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றார். தனது தந்தையின் நாடகங்கள் தொடர்பான புத்தகங்களை பெற்று தற்போதைய கலைஞர்களுடன் இணைந்து தந்தையின் நாடகங்களுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். காத்தான் கூத்தில் பாத்திரம் ஏற்று நடிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் முக்கியமான நிகழ்வாக இருக்கும். காப்பு கட்டுதல் என்பது அண்ணாவியார் காப்பு சொல்லிக் கொடுக்கும் போது கூத்தாடுபவர்கள் அவற்றை அண்ணாவி பாடுவது போல் பாடுவார்கள்.
இவரது கலை தொண்டிற்காக 2013ம் ஆண்டு கரைச்சி பிரதேச கலாச்சார பேரவையால் கரைஎழில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் பல இடங்களில் பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டது.