ஆளுமை:சின்னராஜா, சின்னத்துரை
பெயர் | சின்னராஜா |
தந்தை | சின்னத்துரை |
பிறப்பு | 1948.03.10 |
ஊர் | கிளிநொச்சி, அக்கராயன்குளம் |
வகை | பல்துறையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னராஜா, சின்னத்துரை (1948.03.10 -) யாழ்ப்பாணம், மூளாயை பிறப்பிடமாகக் கொண்ட பல்துறையாளர். இவரது தந்தை சின்னத்துரை ஆவார். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி நகர குடியேற்றத்தின் பின்னர் பாரதிபுரம் என்னும் கிராமத்தில் குடியேறினார்.
இவர் பஜனைப்பாடல்கள் பாடுவதோடு, நகைச்சுவை நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார். லண்டன் லேடி, பெல் பொட்டம் செல்லம்மா, அஞ்சு நாள் காய்ச்சல் போன்ற நாடகங்களிலும், இஸ்ட் தெய்வங்களின் பாடல்களை இயற்றி இசையமைத்து பாடுவதையும் தனது சேவையாகச் செய்து வந்துள்ளார். இவர் ஆலயங்களில் பஜனைப் பாடல்களை பாடி மக்களின் நன்மதிப்பை பெற்று 2001 ஆம் ஆண்டு பொதுமக்களால் ஆலயத்தில் வைத்து தோல்வாத்தியம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அத்தோடு நாடகத்துறைக்கு தனது பங்களிப்பையும் நல்கியுள்ளார்.
இவரது 20 வருடத்திற்கு மேலான கலை, சமயச்சேவையைப் பாராட்டி கரைச்சி பிரதேச கலாச்சார பேரவையினால் 2014 ஆம் ஆண்டுக்கான கரை எழில் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.