ஆளுமை:ரூபசுகந்தினி, நித்தியானந்தராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 2 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ரூபசுகந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரூபசுகந்தினி
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் சின்னாச்சி
பிறப்பு 1970.05.18
ஊர் கிளிநொச்சி
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரூபசுகந்தினி, நித்தியானந்தராசா (1970.05.18 - ) புலோப்பளை மேற்கைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் சின்னாச்சி. இவர் தனது ஆரம்பக் கல்வியை பளை மகாவித்தியாலத்தில் மேற்கொண்டார். பாடசாலை மட்டத்தில் 9 ஆம் ஆண்டில் தேனிசை மழை நிகழ்ச்சி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம் பெற்றது. ஆரம்ப நாட்களில் நடனத்தை மிக விருப்பத்துடன் பழகி வந்ததுடன் அலாரிப்பூ குழு நடனம் என்ற நடனத்திற்காக மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார். 1990 ஆம் ஆண்டுகளில் தெருக்கூத்து கலைஞர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களுக்கான பாடல்களையும் பாடியுள்ளார்.

1991இல் தொண்டராசிரியர் கடமையாற்றிய பாடசாலைகளாக கிளாலி,வேம்பொடுகேணி,பளை மத்திய மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கலை நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தி முதல் இடங்களையும் பெற்றுக்கொள்ள வழி சமைத்தார். 2010 - 2012 மாகாண இலக்கிய விழா மற்றும் பிரதேச விழாக்களில் இவரது நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது.இன்று இசைக்கலை சார்ந்த பல்வேறு பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றார்.